
இத்தாலியில், சீர்வியோ.பெலுஸ்கோனியின் ஒரு VILLA இலுள்ள புதிய கட்டிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளதாக இத்தாலியின் அதிகாரிகள் மே 3 ஆம் நாள் கூறியிருந்தனர். பெருலுஸ்னிகோ இதற்கு முன் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். அவர் தற்காலிக தலைமை அமைச்சராக இருந்தார். அவர் சார்திங் தீவில் உள்ள தனது VILLA வின் முற்றத்தில் ஒரு செயற்கை மலையை உருவாக்கினார்.
இந்த செயல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மீறியதா என்பதை தொடர்புடைய துறைகள் ஆய்வு செய்து வருவதாக சாதிங் தீவு பிரதேசத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். அங்குள்ள நில அமைப்பையும் தோற்றத்தையும் மாற்றக் கூடாது என்று சட்டவிதிகள் கூறுகின்றன. இத்தாலியின் ஒரு தொலைக்காட்சி நிலையம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய பின், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகளை ஆய்வு செய்யுமாறு உள்ளூர் அரசு கட்டளையிட்டுள்ளது.
இத்தாலியின் சில செய்தித்தாள்களும் இந்த செயற்கை மலையின் படங்களை வெளியிட்டன. VILLA வின் முற்றத்தில் பூங்காவில் அடிக்கடி காணப்படும் ஒரு நீள நாற்காலியும் நான்கு சிறிய பனை மரங்களும் இருக்கின்றன. காட்சி மிக அழகானது என்று கூறப்படுகின்றது. கருவுற்ற கிழவி கடந்த ஆண்டு அக்டோபர் திங்களில் பிரிட்டனைச் சேர்ந்த 63 வயதான ஒரு கிழவிக்கு சோதனை குழாய் கருவணுவை பொருத்தியதாகவும் தற்போது இந்த கிழவி ஏற்கனவே கருவுற்றிருப்பதாகவும் இத்தாலி மருத்துவர் ஒருவர் மே திங்கள் 4 ஆம் நாள் அறிவித்தார்.
குழந்தை சீராக பிறந்தால், இவர் பிரிட்டனில் மிக அதிக வயதில் குழந்தையைப் பெற்ற ஒரு பெண்ணாக மாறுவார். பாட்ரீசியா. ராஷ்புருக் என்ற பெயருடைய இந்த பிரிட்டிஷ் பெண், ஒரு குழந்தை மனநிலை ஆலோசனை ஆசிரியர். இவர், இத்தகைய பரிசோனைக்கான மிக சிறப்பானவராவார். ஏனென்றால், அவருடைய வயது 63 ஆக இருந்த போதிலும், அவருடைய உயிரியல் வயது சுமார் 45 மட்டுமே என்று இத்தாலி மருத்துவர் செவிலினோ. அந்தினோ கூறினார்.
அவரும் அவருடைய கணவரும் இங்கு வந்திருக்கிறார்கள். அவர் மெலிந்த உடல், பொன் நிற தலைமயிர் ஆகியவற்றுடன் மிக ஆரோக்கியமாக காணப்படுகின்றார். கருத்தரிப்பதற்குத் தேவையான அனைத்து நிபந்தனைகளுக்கும் அவர் ஏற்றதாக இருக்கின்றார். அவர் மேலும் குறைந்தது 20 அல்லது 25 ஆண்டுகள் உயிர்வாழ்வார் என்று இந்த மருத்துவர் கூறினார். ராஷ்புருகின் கணவர் ஜோன் பிராண்ட் ஒரு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், இப்பொழுது அவர் கருவுற்று 7 திங்களாகிவிட்டது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். குழந்தை விரைவில் பிறப்பதை எதிர்பார்க்கின்றோம் என்று கூறினார்.
|