இவ்வாண்டின் பிற்பாதியில் சீனப் பொருளாதாரம்
cri
இவ்வாண்டின் பிற்பாதியில், சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் தணிவடையும் என்று உலக வங்கி இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மதிப்பிட்டுள்ளது. பொருளாதாரம் அளவுக்கு மீறி வளர்வதைத் தடுக்க, அண்மையில், இறுக்கமான பணக் கொள்கை, திட்டப்பணியில் முதலீடுகளை மேலும் கட்டுப்படுத்துவது, மூலதன ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை தளர்த்துவது என்பன போன்ற சீன அரசின் நடவடிக்கைகள் பயன் அளித்துள்ளன என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாண்டின் பிற்பாதியில், அசையாச் சொத்துக்களில் முதலீடும் ஏற்றுமதியும் குறைந்து, பொருளாதார வளர்ச்சி, 10 விழுக்காட்டுக்கு குறைவாகவே இருக்கும் என்று அறிக்கை கருதுகின்றது.
|
|