பாண்டிச்சேரி பெரிய காலாப்பட்டு நேயர் பி.சந்திரசேகரன் எழுதிய கடிதம். மே 31ம் நாள் இடம்பெற்ற நேயர் நேரம் நிகழ்ச்சி, நேயர்களின் நெஞ்சத்தில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். பல புதிய நேயர்களின் கடிதங்களும் வாசிக்கப்பட்டதற்கு நேயர் நேரத்தை தடை இல்லாமல் வழங்கி வருவதன் மூலம் நேயர்களின் அன்பையும் ஆதரவையும் அதிகம் பெறுகிறது நமது வானொலி. வழங்கிய அன்பர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து நீலகிரி கீழ்குந்தா நேயர் கே.கே.போஜன் எழுதிய ஜூன் 5ம் நாள் இடம்பெற்ற உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். நிகழ்ச்சியில் கீரை கலந்த காளான் கறி என்று கூறி அதன் சமைக்கும் முறையை கூறக் கேட்டோம். காளான் மரக்கறிதான் இதன் சுவை அலாதியானது அதனுடன் கீரையை சேர்ப்பது கூட்டு முயற்சியில் கூட்டுக்கறியின் சுவையை அதிகமாக்கும் என்பது உண்மையே. தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் சிப்பிக்காளான், செட்டிபாளையம் காளான் என அதிகளவு விற்பனையாகிறது. இவற்றை பலமுறை சுவைத்துள்ளோம். ஆனால் கீரையுடன் சேர்த்து உண்டதில்லை. கீரையை சேர்த்து சமைத்தால் குறைந்த விலையில் சுவையான கூட்டு சமைக்கலாம் என்பது உண்மை என்று எழுதியுள்ளார்.
வாணி: அதே நிகழ்ச்சி குறித்து திருச்சி, தெற்கு சாலாக்காடு நேயர் ஆர்.மகேந்திரன் எழுதிய கடிதத்தில், காளான் கறியை சமைக்க கற்றுக்கொடுத்த ராஜாராம், கலையரசி ஆகியோருக்கு நன்றிகள், நிகழ்ச்சியைக் கேட்டது சமைத்துக் காட்டியதை கண்டதுபோல் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அபினிமங்கலம் க. அருண் எழுதிய கடிதத்தில், ஜூன் 9ம் நாள் ஒலிபரப்பான "சீன ஐரோப்பிய பொருளாதார வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை" என்ற செய்தித் தொகுப்பு, விளக்கமாக இருந்தது. 8ம் நாளன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத் துறைக்கு பொறுப்பான பீட்டர் மண்டேல்சன் பெய்சிங் வந்தார், சீன வர்த்தக அமைச்சரோடு பேசினார் என்பதை அறிந்தேன். சீனாவுடன் வர்த்தக உறவை அனைத்து ஐரோப்பிய நாடுகளும் மேற்கொள்வது முக்கியம் என்று மண்டேல்சன் கூறியது உண்மையே. ஆனால் சீனத் தோல் பொருட்கள் மீது கடந்த ஆண்டு ஜூன் முதல் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கூடுதலான வரியை ரத்து செய்தால் வர்த்தகம் சீன அரோப்பிய ஒன்றிய வர்த்தகம் நன்கு வளர முடியும். இது தொடர்பாக சீனா மன நிறைவின்மையை தெரிவித்தது வரவேற்கத்தக்கது. நிகழ்ச்சியை வழங்கிய விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
|