• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-17 17:23:11    
கட்டுரை போட்டி சீன இந்திய நட்புறவு

cri
எழுதியவர் பாலூர் பி.எஸ்.சுந்தரராஜன்

2006ம் ஆண்டினை சீனாவும் இந்தியாவும் இணைந்து "சீன-இந்திய நட்புறவு ஆண்டு"என கொண்டாட தீர்மானிக்கப்பட்டதை வெகுவாய் பாராட்டி வரவேற்போம்.

சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையே தூதாண்மை உறவு 55 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது தான். இவ்வாறு உருவான இந்த நட்புறவினை எப்படி வளர்க்கலாம்?அல்லது வளர்க்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.

சீனாவும் இந்தியாவும் வளர்ந்து வரும் நாடுகள்.இவற்றின் வளர்ச்சி வேகம் வல்லரசு நாட்டினையே அச்சம் அடையச் செய்துள்ளது. இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக மேம்பாடு இவைகளினால் மேலை நாடுகளின் கவனம் நமது பக்கம் திரும்பியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையே நட்பு எப்படி வளரும்? இது இரண்டும் ஒன்றை ஒன்று முழுமையாக புரிந்து கொள்ளும் போதே ஏற்பட வாய்ப்புள்ளது.

இரண்டு நண்பர்கள் ஒருவரை மற்றவர் கேள்விப்பட்டதன் மூலமே அறிவர். நேரில் பார்த்தது கிடையாது இருவரும் பல ஆயிரம் மைல் இடைவெளியில் பிரிக்க முடியாத அளவு அன்பும் பாசமும் மேலிட்டது. ஒரு நாள் இருவரில் ஒருவர் நோய் வாய்பட்ட போது நட்புக்கு இலக்கணமாய்த் திகழும் நாம் சந்திக்க இயலவில்லையே என வருந்தினார்.

இதை எப்படியோ மற்றவர் அவரின் ஆத்மார்த்த உறவின் பலனாய் புரிந்து கொண்டு திடீரென பார்க்க புறப்பட்டார். தமது நீண்ட பயணத்திற்குப் பின் அவர் அவரை கண்டார். இரு கண்களின் சங்கமம் பேசாமல் பேசியது. இது ஆத்மார்த்த நட்பு. இது போலவே சீனாவும் இந்தியாவும் சந்திக்க கூடிய தூரமில்லாது பிரிந்துள்ள பரஸ்பர நட்பு நாடுகள் தான். இவற்றின் நட்பும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத தாகவே இருப்பது அவசியம்.

இரு நாடுகளும் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு பொருளாதாரத மேம்பாட்டுக்கும் வளர்ச்சி திட்டப் பணி மேம்படவும் இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம் விவசாயம், கல்வி மற்றும் எல்லா வகையான மேம்பாட்டிற்கும் இணைந்து செயல்பட வழி செய்ய வேண்டும்.

இந்தியாவும் சீனாவும் ஆசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக முன்னேறி வருகின்றன. இந்த வளர்ச்சியினைக் கண்டுதான் மேலை நாடுகள் அச்சம் கொள்கின்றன.

நமக்கு வல்லரசு நாடுகளின் அச்சுறுத்தல் ஒருபுற மிருந்தாலும் மேலை நாடுகளின் அணு ஆயுத வளர்ச்சியும் ஒரு பக்கம் அச்சத்தினை தருகிறது.

இந்தியா விவசாயநாடு. ஆனால் சீனாவோ தரிசு நில மேம்பாடு என்ற திட்டத்தின் மூல விளை நிலங்களை உருவாக்கிஸ பாலைவனத்தினை சோலையாக்கும் திட்டம் மேற்கொண்டு இருப்பது பாராட்டுக் குரியது இந்த ஆண்டு 5 ஆண்டு திட்ட அறிக்கையில் விவசாயிகள் மேம்பாடு பயிர்க் கடன் வட்டி தள்ளுபடி என்ற பல திட்டங்களினை அறிவித்து மேலை நாட்டின் கவனத்தினை தன் பக்கம் திருப்பியுள்ளது சீனா கல்வியில் கட்டாயக் கல்வி. பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டார் எண்ணிக்கை அதிகம் படி சுற்றுலா பயணிகள் வருகையைக் கூடுவது நோய் எதிர்ப்பு தடுப்பு. பணி என பல திறமையான செயல்பாடுகள் வியக்கச் செய்தாலும் இவைகளின் வளர்ச்சி இந்தியாவில் ஏற்டட நட்பார்ந்த உதவியை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது அவசியம்.

இரு நாடுகளுக்கு இடையே என்றும் அமைதி நிலவிட நல்லுணர்வும் அதனை சீராக்க அந்த நாடு மட்டுமல்ல மக்களும் பாடுபடுவது அவசியம் எந்த விஷயத்திலும் சுமுகமானப் பேச்சு தேவை.

அரசியலிலும் சரி பொருளாதாரத்திலும் சரி வெளிநாட்டு உள்நாட்டு பிரச்சினை எது வானாலும் ஒத்த கருத்துடன் பேசித் தீர்ப்பது அவசியம். வறுமையை ஒழிக்கவும் வேலை இல்லாத்திண்டாட்டம் போக்கவும் கிராமப்புற மக்களின் விவசாயம் முன்னேற தக்கவழி தனையும் 1)விவசாயக் கடன், 2)உற்பத்தி பொருளுக்கு விற்பனைச் சந்தை லஞ்ச ஊழல் ஒழிப்பு போன்று தன் நாட்டிலும் பிற நாட்டிற்கும் உதவு வது நட்பார்ந்த உறவை மேம்படுத்தும்.

நாம் மதம் மொழி இனம் நாடுகளால் வேறுபட்டவர் என்ற எண்ணம் அறவே நீங்க வேண்டும். ஒரே சகோதர சகோதரி என்ற வாஞ்சையுடன் கூடிப் பழகுதல் தேவை. இருநாடுகளும் சகோதர நாடுகள். நேசநாடுகள் என்ற எண்ணம் மேலோங்கினாலே போதும். எந்த ஒரு பகை நாடும் நம்மை சீண்டிப் பார்க்க அஞ்சும்.

நட்பு என்னும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டது. இல்லை நேசநட்பு. பாசம், அன்பு, அரவணைப்பு என்பதால் பிணைக்கப் பட்டவர்கள் நாம் கூடி பாசமுடன் வாழும் நம்மை எந்த வல்லரசும் நெருங்கிடுமா?தூசியை போல் ஊதி தள்ளி விடுவோம் அன்பே என்றும் உயர்வானது அந்த அன்பின் வழியிலேயே இரு நாட்டிற்கு இணைப்பைத் தருவோம். வளர்க நம் இந்திய-சீன நட்புறவு.