• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-18 17:20:14    
11வது உலக ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள்

cri
ஆகஸ்ட் 15ம் நாளன்று சீனத் தலைநகர் பெய்சிங்கில் 11வது உலக ஜூனியர் தடகள சாம்பியன் போட்டிகள் ஆரம்பமாகி இன்று வரை நடைபெற்றன. உலக ஜூனியர் அல்லது உலக இளநிலை தடகள சாம்பியன் போட்டிகளில் 182 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த இளம் தடகள விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றனர். பல கோடி மக்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக கண்டுகளித்த வண்ணமயமான துவக்க விழாவை மிஞ்சும் விதமாக பல இளம் தடகள வீரர்களும், வீராங்கனைகளும் தங்களது திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்தி நட்சத்திரங்களாக மின்னியுள்ளனர்.

இந்த தடகள போட்டிகளில் பல புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.

போட்டியின் முடிவுகள் சில தற்போது உங்களுக்காக:

பெண்கள் குண்டெறியும் போட்டியில் நெதர்லாந்தின் போக்கெல்மன் மெல்லீசா 17.66 மீட்டர் எறிந்து தங்கப்பதக்கம் பெற்றார். ஜெர்மனியின் ஹின்ரிச் டெனீஸ் வெள்ளியும், ரஷ்யாவின் டரசோவா ஐரீனா வெண்கல பதக்கமும் பெற்றனர்.

பெண்கள் 5000மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சீனாவின் ஷூஉ ஃபெய் தங்கம் வென்றார். கென்யாவின் கிப்லகத் ஃப்ளோரன்ஸ் ஜெபத் வெள்ளியும், நூஜி மேரி வசேரா வெண்கலமும் வென்றனர்.

ஆண்கள் 10000மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பியாவின் இப்ராஹீம் ஜெயிலான் காஷு தஙமும், கென்யாவின் ஜோசஃப் எபூயா வெள்ளியும், பக்ரைனின் ஆதாம் இஸ்மாயில் காமிஸ் வெண்கலமும் வென்றனர்.

ஆண்கள் நீளம் தாண்டும் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ராபர்ட் க்ரோதர் தங்கப்பதக்கம் வென்றார். அமெரிக்காவின் ஆன்டன் பெல்ட் வெள்ளியும், சீனாவின் சாங் ஷியோயி வெண்கலமும் வென்றனர்.

ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பிரிட்டன் நாட்டு ஹாரி ஐகினெஸ் அரியீதி 10.37 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார். கனடாவின் ஜஸ்டின் வார்னர் வெள்ளியும், ஜமைக்காவின் யோஹான் பிளேக் வெண்கலமும் வென்றனர்.

பெண்கள் சுத்தியெறிதலில் ரோமானியாவின் பியாங்கா பியர் தங்கம் வென்றார். ரஷ்யாவின் ஆனா பல்காகோவா வெள்ளியும், சீனாவின் ஹாவோ ஷுவேய் வெண்கலமும் வென்றனர்.

பெண்கள் 100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பல்கேரியாவின் தெஸ்ட்சான் நய்மோவா 11.28 வினாடிகளில் வெற்றி இலக்கை அடைந்து தங்கப்பதக்கம் பெற, அமெரிக்காவின் காபோ மேயோ வெள்ளியும், ஜமைக்காவின் கேரி ரசல் வெண்கலமும் பெற்றனர்.

பெண்கள் 3000மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கென்யாவின் காரொலின் செக்கூரி துயிகாங் தங்கமும், ரொமேனியாவின் அன்குடா போபோசெல் வெள்ளியும், எத்தியோப்பியாவின் மெக்டஸ் பெகேலே தடாஸே வெண்கலமும் வென்றனர்.

பெண்கள் 400 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் காலியேசே ஸ்பென்சர் தங்கப்பதக்கமும், அமெரிக்காவின் நிக்கோல் லீச் வெள்ளியும், ஜமைக்காவின் ஷெரீன் பின்னோக் வெண்கலமும் வென்றனர்.

பெண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குரோவேஷியாவின் டானியேலா கிர்சிக் தங்கம், ஜமைக்காவின் சோனிடா சதர்லேன்ட் வெள்ளி, சூடானின் நவால் எல் ஜேக் வெண்கலம் வென்றனர்.

ஆண்கள் பிரிவில் ட்ரினிடாட் மற்ரும் டொபேகோவின் ரென்ன்ய் காவ் தங்கப்பதக்கம் பெற்றார். அமெரிக்காவின் ஜஸ்டின் ஆலிவர் வெள்ளியும், பிரிட்டனின் மார்ட்டின் ரூனி வெண்கலமும் வென்றனர்.

ஆண்கள் உயரம் தாண்டும் போட்டியில் சீனாவின் ஹுவாங் ஹெய் சியாங் 2.32 மீட்டர்கள் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றார். இஸ்ரேல் நாட்டு நிகி பள்ளி 2.29 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கம் பெற, யுக்ரேன் நாட்டு போதான் போன்டாரென்கோ 2.26 மீட்டர் தாண்டி வெண்கலம் பெற்றார்.