சீன வங்கிகளில் சேமிப்புக் கணக்கில் போடப்படும் பணத்துக்கு வழங்கப்படும் வட்டியை ஆகஸ்ட் 19 முதல் 0.27 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. சீன மத்திய வங்கி இந்த ஆண்டில் வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பது இது இரண்டாவது தடவையாகும். இதன் படி, ஓராண்டுகால வங்கி சேமிப்புக்கான வட்டி 2.52 விழுக்காடு வரை உயர்த்தப்படுகின்றது. ஓராண்டுகால கடனுக்கான வட்டியும் 6.12 விழுக்காடு வரை உயர்தத்ப்படுகின்றது. வெவ்வேறு தவணை சேமிப்புக்கான வட்டியும் கடன்களுக்கான வட்டியும் உயர்த்தப்படுகின்றன. முதலீடும், கடனும் அதிகரிக்க இந்த வட்டி அதிகரிப்பு உதவும். மேலும், நிதி நிறுவனங்கள் கடன் ஆபத்தில் சிக்குவதும் தடுக்கப்படும் என்று மத்திய வங்கி கூறுகின்றது.
|