முன்பை மேற்கொண்ட வேதனை தரும் பயிற்சி மதிப்புமிக்கது. இதன் விளைவாக, இன்று அரங்கில் என்னை வெளிப்படுத்த முடிகிறது. பணி கடினமாக இருந்த போதிலும், மகிழ்ச்சி நேரம் நீடித்திருக்கிறது. சீனாவில் மாடல்களுக்கு ஊதியம், அதிகமாகும். திங்களுக்கு பத்து ஆயிரம் யுவான் கிடைக்கிறது. பணி இல்லாத நேரத்தில், அவர்கள் விருந்திலும், பாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்கிறார்கள். ஆனால், மாடல் பணி, இளைஞர்களின் பணியாகும். இந்த இளம் மாடல்களின் எதிர்காலம் எப்படி? வயது அதிகமான மாடல் அழகிகள், எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுகிறார்கள்
. பஃச்சின் துறையில் நீண்ட காலமாக பணிபுரிந்ததால், இயற்கையாகவே ஒரு அன்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்தில் மாடல் துறையில் ஈடுபடாமல் இருந்தாலும், தெரிந்தெடுக்கும் பணி, பஃச்சின் துறையுடன் தொடர்புடையது என்றார் ஒரு மாடல் அழகி, மாடல் தொடர்புடைய துறைகள் அதிகமாகும். சில மாடல்கள், சுயமாக தொழில் செய்கினறனர். மாடல் அழகி jiangpeilin சொந்தமாக மாடல் பயிற்சி நிறுவனத்தை நிறுவியுள்ளார். நாளுக்கு நாள் சுறுச்சுறுப்பாக வணிகம் நடைபெறுகிறது. தவிரவும், சில மாடல் பயிற்சி நிறுவனங்கள், சில மாடல்களின் எதிர்கால திட்ட்த்துக்கு தேவையான ஆயத்த பணிகளையும் செய்கின்றன. Dongfang bingli பண்பாட்டு வளர்ச்சி மையம் என்பது, சீனாவின் ஒரு புகழ்பெற்ற மாடல் பயிற்சி நிறுவனமாகும். சீனாவின் பல மிக புகழ்பெற்ற மாடல்கள் இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆடை show, போட்டிகளுக்கு, தலைமை தாங்குவது, தொலைகாட்சி நாடகம் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளை இந்த நிறுவனம் மாடல்களுக்கு வழங்குகின்றது. தவிரவும், ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் மாடல்களுக்கு கிடைக்கிறது. எமது நிறுவனத்தைச் சேர்ந்த மாடல்களுக்கு பல வழிகளில் வளர்ச்சி வாய்ப்பபு வழங்கப்படுகிறது. மாடல் பணி ஒரே ஒரு வழி அல்ல. மாடல்களின் நிலைமைக்கிணங்க, பள்ளிக்குச் சென்று கற்றுக் கொண்டு, தொலை காட்சி நிகழ்ச்சிகளில், அவர்கள் ஈடுபடலாம். குறிப்பிட்ட தகுநிலையும் மேம்பாடும் இருந்ததால், மாடல்கள் இந்த துறையில் முன்ணனி இடம் பெற வேண்டும். இப்படி செய்தால் தான் மற்ற நிறுவனங்கள் எங்களை பின் தொடரலாம் என்று dongfang bingli நிறுவனத்தின் செல்வி வான் சிங் கூறினார்.
|