• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-22 14:05:45    
உற்சாகத்துடன் காச நோய் தடுப்பு முயற்சி

cri
கிளீட்டஸ்......இதன் மூலம் 2004ம் ஆண்டு ஜனவரி திங்களில் சீன நாட்டின் முழுவதிலும் காச நோய் உள்ளிட்ட தொற்று நோய் பற்றி அறிவிக்கும் வலைபின்னல் அமைப்பு முறை துவங்கியது. அப்படிதானே.

கலை......வலை பின்னல் அமைப்பு முறை உருவாக்குவது தவிர, சீன அரசு காச நோயாளிகளை கண்டறியும் கிராமப்புற மருத்துவர்களுக்கு ஊக்க பரிசுத் தொகை வழங்குகின்றது. காச நோயாளி என ஐயத்துக்குரியவர்களை அறிவிக்க அவர்களுக்கு ஊக்கமளித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கிராமங்களில் மருத்துவத் துறையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் இத்தடுப்பு துறையில் காட்டிய உற்சாகம் உயர்த்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹோநான் மாநிலத்தின் சிங்மி நகரில் சுகாதார அதிகாரி லெ ஹுன் சியென் கூறியதாவது.

கிளீட்டஸ்......கிராமங்களில் காச நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறையில் ஈடுப்பட்டுள்ள மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளை கண்டறிந்து அறிவிக்கும் பணியை சோதிக்க நாங்கள் ஆண்டுதோறும் கிராமங்களுக்குச் சென்று வருகின்றோம். சோதிக்கும் போக்கில அறிவிக்கப்பட வேண்டிய நோய் அறிவிக்க வில்லை என்ற விடயத்தை கண்டறிந்தால் சில தண்டனை விதிக்கின்றோம் என்றார் அவர்.

கலை......இந்த நடவடிக்கை மூலம் சீனாவில் காச நோயாளிகளை உடனடியாக கண்டறியும் விகிதம் விரைவாக உயர்ந்துள்ளது. 2003ம் ஆண்டில் கண்டறியும் விகிதம் 39 விழுக்காடாகும். 2005ல் இந்த விகிதம் சுமார் 79 விழுக்காட்டை எட்டியுள்ளது.

கிளீட்டஸ்...... காச நோயை இலவசமாக சோதித்து சிகிச்சையளிக்கும் கொள்கையை சீனா 2001ம் ஆண்டு முதல் நாடு முழுவதிலும் மேற்கொண்டுள்ளது. நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சையும் மருந்துகளும் வழங்கபப்டுகின்றன. இந்த நோய்க்கான சிறப்புச் செலவை உத்தரவாதம் செய்யும் வகையில் சீன மத்திய நிதி அமைச்சகம் ஆண்டுதோறும் 4 கோடி யுவானை ஒதுக்கி வருகின்றது.

கலை......இது மட்டுமல்ல 2004ல் இந்த தொகை 30 கோடி யுவானாக அதிகரித்துள்ளது. 2005ம் ஆண்டு ஜனவரித் திங்களில் காச நோய் தடுப்பு நிர்வாக தகவல் அமைப்பு முறை துவங்கியது. கண்டறியப்பட்ட நோயாளிகளின் தகவல் பதிவேட்டு கிடங்கு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு முறை மூலம் சீன சுகாதார அமைப்பு இடம் நகரும் காச நோயாளிகளை பின்பற்றி சிகிச்சை அளிக்கின்றது.

கிளீட்டஸ்.......சிகிச்சையளிக்கும் போக்கில் சீனா உலக சுகாதார அமைப்பு அறிமுகப்படுத்திய வழி முறையை மேற்கொண்டுள்ளது. நோயாளிகள் கண்காணிப்பாளர்களின் பார்வையில் மருந்தை உட்கொள்வது இந்த வழிமுறையின் தனிச்சிறப்பியல்பாக்கும். இது பற்றி சியூ சுவெய் லீ அம்மையார் கூறியதாவது

 கண்காணிப்பாளரான நான் தடுப்பு மற்றும் சிகிச்சை நிலையத்துக்கு வந்து மருந்து உட்கொள்ளுமாறு நோயாளிகளை அழைக்கின்றேன். மருந்து தீர்ந்து விட்டால் நோயாளிகளின் உடம்பில் மருந்து எதிர்ப்பு ஆற்றல் விளையும். இந்த நிலைமையில் அவருடைய நோய் நிலைமை கடுமையாகுவது மட்டுமல்ல அவருடைய உடம்புக்கு மற்ற மருந்துகளை ஏற்றுக் கொள்ளும் ஆற்றலும் குறைந்து விடும்.

கிளீட்டஸ்........சீன சுகாதார அமைச்சகம் பிரச்சாரம் செய்த இந்த கண்காணிப்பு அமைப்பு முறை நோய் சிகிச்சையளிப்பதில் தோன்றிய மருந்து தீர்ந்து விடுதலை தடுத்துள்ளது.

கலை.....பொதுவாக கூறின், சீன அரசு காச நோயை தடுத்து சிகிச்சை அளிப்பதில் மென்மேலும் கவனம் செலுத்தியதுடன் சீனாவில் காச நோய் தடுப்பு நிலைமை மாபெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

கிளீட்டஸ்.....2005ம் ஆண்டின் இறுதி வரை சீனாவில் காச நோயாளிகள் குணமடையும் விகிதம் 91 விழுக்காட்டை எட்டியுள்ளது. இந்த சாதனை உலக சுகாதார அமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.