கலை......முதலில் 3 வெள்ளரிக்காய்களை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அப்புறம் சாப் ஸ்டிக்கர் இரண்டு குச்சிகள் எடுத்து காய்கறி வெட்டும் மர பலகையில் வைக்க வேண்டும்.
ராஜா...... வெள்ளரிக்காய் சமையலுக்கு சாப்ஸ்டிக் தேவையா?தமிழ் நாட்டில் கிடைக்காதே.
கலை..... இந்த காய்கறியை தயாரிக்கும் போது குச்சிகள் தேவைதான். வெள்ளரிக்காய் நடுக்கும் போது இந்த குச்சிகள் பயன்படுத்தப்படும்.
ராஜா.......சரி தொடர்ந்து சொல்லுங்கள்.
கலை....... முதலில் வெள்ளரிக்காயை இரண்டு உணவுக் குச்சிகளுக்கு நடுவில் அல்லது அவை போன்ற நீளமான குச்சிகளுக்கு நடுவில் வைத்து, நீளமாகக் கீற வேண்டும். ஆனால் வெள்ளரிக்காய் இரண்டு தனித்தனி பாகங்களாகப் பிரிந்து விடக் கூடாது. அப்புறம், வெள்ளரிக்காயை குறுக்கும் நெடுக்குமாக அதாவது அம்புக்குறி போல வெட்டுங்கள். ஆனால் வெள்ளரிக்காய் துண்டு துண்டாகப் பிரிந்து விடக் கூடாது. அப்படிப் பிரியாமல் குச்சிகள் தடுக்கின்றன. பிறகு வெள்ளரிக் காயைப் புரட்டிப்போட்டு மறுபடியும் குறுக்கும் நெடுக்குமாக அம்புக் குறி போல் வெட்டுங்கள். இப்போது வெள்ளரிக்காயைத் தூக்கிப் பிடித்தால் அது அழகான சங்கிலி போல காட்சியளிக்கும்.
ராஜா......அப்புறம் தின்னலாமா?
கலை.........தின்னக் கூடாது. ஒரு பாத்திரத்தில் வெள்ளரிக்காயை வைத்து கொஞ்சம் உப்பு தூவுங்கள். பிறகு நல்லெண்ணெய் அதன் மேல் தெளியுங்கள். அப்புறம் ஐஸ் பெட்டிக்குள்ளே வையுங்கள். பிறகு இருப்பது நிமிடம் கழிந்த பின் வெள்ளரிக்காய் நன்றாக ஊறிவிடும். அப்புறம் என்ன? தின்ன வேண்டியது தானே.
ராஜா.......இந்த காய்கறியை தயாரிப்பதில் சிக்கல் இல்லை என்று உணர்கின்றேன். முக்கியமானது பயிற்சி தான்.
கலை.......நேயர்களே இப்போது சீன உணவரங்கம் நிகழ்ச்சி நேரம் ஆகிவிட்டது. அடுத்த வாரம் இந்த நேரத்தில் மீண்டும் சந்திப்போம்.
|