துறைமுகங்களின் கட்டுமானத்துடன், துறைமுகத்துக்கு அருகே தொழில் பகுதியும் வளர்ச்சியடைந்து வருகின்றது. புச்சேள நகரிலுள்ள சின் காங், ஆழ் நீர் பெட்டக துறைமுகமாகும். அதன் பொறுப்பாளர் சா புஃயொங் எமது செய்தியாளரிடம் பேசுகையில், எரியாற்றல், வேதியியல் தொழிற்துறை, பின்னணி சேவை ஆகியவற்றை முக்கியமாக கொள்ளும் நவீன துறைமுக தொழில்கள் அடங்கிய தொழில் மண்டலம் கட்டப்பட்டு வருகிறது என்றார்.
தறைமுகத்துக்கு அருகே தொழிற்சாலைகளை அமைப்பதால் ஏற்படும் நன்மை குறித்து அவர் கூறியதாவது:
தொழில் நிறுனத்தில் மூலப்பொருட்கள், தொழிலாளருக்கான செலவு ஆகியவற்றை தவிர, பின்னணி செலவு மிகவும் முக்கியமானது. கப்பல் போக்குவரத்து செலவு மிகவும் குறைவு. துறைமுகத்துக்கு அருகில் தொழிற்சாலையை அமைப்பதால், தொழில் நிறுவனத்தின் செலவை மிகவும் துறைக்க முடியும் என்றார் அவர்.
2010ம் ஆண்டு வரை, செழிப்பான துறைமுக மூலவளத்தைப் பயன்படுத்தி, எண்ணெய் மற்றும் வேதியியல், எரியாற்றல், வாகனத் தயாரிப்பு, கப்பல் செப்பனிடுதல் முதலிய தொழிற்சாலைகள் புச்சியானில் உருவாகியுள்ளன.
துறைமுகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், பெருமளவிலான தைவான் தொழில் நிறுவனங்கள் புச்சியானுக்கு வந்துள்ளன. தற்போது, தைவானின் மின்னணு தகவல், உயிரி மருந்து, இயந்திரங்கள் முதலிய உயர் அறிவியல் தொழில் நுட்ப தொழில்கள் அடுத்தடுத்து புச்சியானில் உருவெடுத்துள்ளன. கடந்த பிப்ரவரி திங்களில், உலகின் மூன்றாவது பெரிய LCD உற்பத்தி வணிகரான தைவானின் யூதா குழுமம், புச்சியான் மாநிலத்து சியாமென் நகரத்தின் உயர் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மண்டலத்தில் தயாரிப்பு தளத்தை கட்டத் தொடங்கியது. அதன் மொத்த மூதலீடு, 50 கோடி அமெரிக்க டாலராகும். இது குறித்து, அந்த மண்டலத்தின் நிர்வாக கமிட்டித் துணை தலைவர் SUN DA HAI கூறியதாவது:
இக்குழுமம், பத்துக்கும் அதிகமான தொழில் தொகுதி நிறுவனங்களைக் கொண்டு வந்துள்ளது என்பது, அதன் முக்கியத்துவமாகும். இத்திட்டப்பணியின் மொத்தம் உற்பத்தி, 4000 கோடி யுவானை எட்டும். அதன் தொழில் தொகுதி நிறுவனங்களின் உற்பத்தி, 2000 கோடி முதல் 3000 கோடி யுவானாகும்.
உயர் அறிவியல் தொழில் நுட்பம் தவிர, தைவானில் இருப்பது போன்ற காலநிலை இங்கே இருப்பதால், தைவான் வணிகர்கள் வேளாண் துறையில் முதலீடு செய்ய இங்கே வந்துள்ளனர். புச்சியான் மாநிலத்தின் தென்பகுதியிலுள்ள சாங்பு மாவட்டத்தின் தைவான் வேளாண் தொழில் பண்ணையில், சு ஸி யன் என்ற தைவான் வணிகர் ஒருவர், மலர்த்தோட்டம் அமைத்து, விற்பனை நிறுவனத்தை நிறுவியுள்ளார். அவர் பயிரிடும் Orchid மலர், ஐரோப்பிய சந்தையில் வரவேற்கப்படுவதாக அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
தைவானின் வேளாண் துறை, உயர் அறிவியல் தொழில் நுட்பத்தினால் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், பெருநிலப்பகுதி, பாரம்பரிய நுட்பத்தையே சார்ந்திருக்கிறது. இதனால், தைவானின் வேளாண் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, வேளாண் உற்பத்தி பொருட்களை மறு பதனீடு செய்வது மூலம், உள்ளூர் விவசாயிகளுக்கு பயனளிக்க முடியும் என்றார் அவர்.
சீனாவின் பொருளாதார வளர்ச்சியடைந்த வட்டாரத்தில் அமைந்துள்ள புச்சியான் மாநிலம், வாய்ப்பைக் கண்டறிந்து, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் நிலைநாட்ட முயற்சி செய்கிறது.
|