• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-21 19:39:59    
நீச்சல் போட்டியின் அன்மைக்கால சாதனைகள்

cri

நீச்சல் போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகம். கால்பந்து, கூடைப்பந்து, தடகள விளையாட்டுக்களைப் போல நீச்சலுக்கும் பெரும் பகுதி ரசிகர்கள் உலகம் முழுவதுமுண்டு. 2008 பெய்சிங் மாநகர ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் நீச்சல் போட்டிகள், ஆசியப் பகுதியில் உள்ள சீனாவுக்கும் அமெரிக்கவுக்கும் இடையிலான நேர வித்தியாசம் காரணம் ப்ரைம் டைம் எனப்படும் மக்கள் அதிகம் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் அமையாது என்பதால், பெய்சிங் ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டிகள் சீனா நேரப்படி காலையில் நடத்தவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் சில நாட்களுக்கு முன்பு செய்திகளில் உலவியது. 2008 பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின்போது நீச்சல் போட்டிகள் எப்போது இடம்பெறும் என்பது ஒரு புறமிருக்கட்டும், இந்த நீச்சல் போட்டிகளில் தொடர்ந்து பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிதாக சாதனைகள் பதிவாகிக்கொண்டிருப்பதை உங்களுக்காக இப்போது அறியத் தருகிறோம்.

2004ம் ஆண்டு ஆசஸ்ட்டில் பெண்கள் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் 400 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியா நீச்சல் வீராங்கனைகள் நிகழ்த்திய 3 நிமிடம் 35.94 வினாடிகள் என்ற சாதனையை கடந்த சில நாட்களுக்கு முன் ஜெர்மனி நாட்டு நீச்சல் வீராங்கனைகள் புடபெஸ்ட்டில் முறியடித்து 3 நிமிடம் 35.22 வினாடிகள் என்ற புதிய சாதனை நேரத்தை பதிவு செய்தனர்.

2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் 800 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் அமெரிக்க நீச்சல் வீராங்கனைகள் நிகழ்த்திய சாதனையையும் ஜெர்மனியின் நீச்சல் வீராங்கனைகள் முறியடித்து புதிய சாதனையாக 7 நிமிடங்கள் 50.82 வினாடிகள் என்ற இலக்கை பதுவு செய்தனர்.

100மீட்டர் ஆண்கள் ப்ரெஸ்ட்ரோக் பிரிவில் 59.30 வினாடிகள் என்ற தனது முந்தய உலக சாதனை அளவை அமெரிக்காவின் ப்ரென்டன் ஹேன்சன் 59.13 வினாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்தார்.

ஜெர்மனியின் பிரிட்டா ஸ்டெஃபான் பெண்கள் 100மீட்டர் ஃப்ரீஸ்டைல் 53.42 வினாடிகள் என்ற முந்தய சாதனையை முறியடித்து 53.30 வினாடிகள் என்ற அளவில் புதிய சாதனையை தனது பெயரில் பதித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஜெசிகா ஷிஃபெர் பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவு நீச்சல் போட்டியில் கடந்த 17ம் நாளன்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். 2 நிமிடம் 5 .40 வினாடிகளில் இவர் பெற்ற வெற்றி முந்தைய சாதனை அளவை 0.21 வினாடிகள் வித்தியாசத்தில் மிஞ்சி புதிய உலக சாதனையாக பதிவானது.