• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-31 15:23:31    
திபெத் மாச்சிஆமி உணவு விடுதி

cri

பெய்ச்சிங்கின் சியூஸுவெய் வீதியில் சலான்வாங்சிங் என்னும் திபெத் இன இளைஞர் கடந்த ஆண்டு ஜுன் திங்களில் திபெத்திய உணவு விடுதியொன்றை நடத்தித் துவங்கினார். அதன் பெயர் மாச்சிஆமி என்பதாகும்.

ஒரு வீட்டின் மாடியில் அமைந்துள்ள இவ்வுணவு விடுதியில் நுழைந்த உடனே, திபெத் கலை அருங்காட்சியகத்துக்கு வந்துவிட்டது போன்று தோன்றுகின்றது.

மஞ்சள் நிறம் அதன் முக்கிய நிறமாகும். மாபெரும் மஞ்சள் நிறச் சுவரில் தீட்டப்பட்ட திபெத் இனத்தின் சட்டக் காப்பு தெய்வப் படம் காணப்படுகின்றது.

திபெத் நாடகத்தில் பயன்படுத்தப்படும் முக மூடி, தாங்கா என்னும் திபெத் ஓவியம், திபெத் மணம் கமழும் மரச் செதுக்கு தட்டுமுட்டு சாமான்கள், தரையில் போடப்பட்ட திபெத் கம்பளம் ஆகியவற்றினால், அங்கு திபெத் மணம் கமழ்கிறது. சலான்வாங்சிங்கிற்கு 37 வயதாகிறது. அவர் கம்பீரமான இளைஞர். திபெத் ஆயர்களின் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் கூறியதாவது,

நான் ஆயர் மகன். ஒரே இடத்தில் நிலையாக வசிக்க விரும்பவில்லை. ஆயரின் வாழ்க்கை மேய்ச்சல் தரையுடன் இணைந்தது. ஆகவே, எங்கெங்கும் சென்று சென்று வாழ்க்கை நடத்த விரும்புகின்றேன் என்றார் அவர்.

பெய்ச்சிங் வருவதற்கு முன், நடன நடிகர், வானொலி அறிவிப்பாளர், செய்தியாளர், பதுப்பாசிரியர் என பல்வேறு பணிகளில் அவர் ஈடுபட்டார்.

பின்னர், ஒரு விளம்பரக் கூட்டு நிறுவனத்தை நடத்தினார். ஒரு முறை, சலான்வாங்சிங்கும் அவருடைய நண்பரும் லாசா நகரில் அமைந்துள்ள ஒரு தேநீர் விடுதியில் காப்பி அருந்தினர்.

சலான்வாங்சிங் அந்த விடுதியில் உள்ளத்தைப் பறிகொடுத்தார். பின்னர், பல முறை அங்கு சென்றார். அந்த விடுதியை நடத்திவந்த அமெரிக்க நங்கையர் இருவர், நாடு திரும்பியதை அடுத்து, சலான்வாங்சிங் அதை ஏற்று நடத்தத் துவங்கினார்.

அவர், கூடுதலாக, அலங்கரித்ததுடன், மேலை நாட்டு உணவு வகைகளையும் திபெத் இன உணவு வகைகளையும் அதிகரித்துள்ளார். இதன் விளைவாக, வியாபாரம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகின்றது.

அங்கு வருகை தருவோரில் 80 விழுக்காடினர் வெளி நாட்டுப் பயணிகளாவர். தற்போது மேன்மேலும் அதிகமான உள்நாட்டு-வெளிநாட்டு நண்பர்கள் திபெத்தை அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.

 

இதனால், பெய்ஜிங்கில் திபெத்திய மணம் கமழும் உணவு விடுதியை நடத்த விரும்புவதாக சலான்வாங்சிங் தெரிவித்தார். அவர் கூறியதாவது,

பெய்சிங்கில் உணவு விடுதி நடத்துவதன் மூலம், திபெத்தின் மதப் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் அறிமுகப்படுத்தலாம். அத்துடன், திபெத் கட்டியத்தின் அலங்காரக் கலை, ஓவியக் கலை, ஆடல்-பாடல் கலை ஆகியவற்றைக் காணலாம்.

இவ்விடுதியில் விருந்தினருடன் உரையாடுவதன் மூலம், திபெத் பற்றி அவர்களிடம் எடுத்துக் கூறலாம் என்றார் அவர். உணவு விடுதியை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் கைவிளைப் பொருட்களனைத்தும் திபெத்திலிருந்து வந்தவை.

அவற்றில் சில, திபெத் ஓவியராலும் கைவினைத் தொழிலாளர்களாலும் தயாரிக்கப்பட்டவை. மாச்சிஆமி உணவு விடுதியில், திபெத் சமையற்காரரின் கை வண்ணத்தில் 100 வகைக்கும் அதிகமான உணவு கிடைக்கின்றது.

இவற்றில் வறுக்கப்பட்ட ஆட்டிறைச்சி, பாலாபானி எனப்படும் ஒரு வகை சூப், தூய்மையான வாற்கோதுவை மது, பட்டா தேநீர் ஆகியவை குறிபிடத் தக்கவை. திபெத்திலிருந்து வரவழைக்கப்பட இனிப்பு வகைகளும் சுவைப்பொருட்களும் அங்கு உண்டு.

சீனாவின் லியௌநின் மாநிலத்தைச் சேர்ந்த லீசொஹாங், மாச்சிஆமி உணவு விடுதிக்கு முதல் முறையாக வருகை தந்த போது, பெய்சிங் மாநகரில் திபெத் இனப் பாரம்பரியப் பண்பாட்டுக் கலையை வெளிப்படுத்தும் இடத்தைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக இவ்விடுதியிலுள்ள திபெத் மணம் கமழும் ஓவியங்கலையும் சிற்பத்தையும் உணர்வு பூர்வமாகப் பார்த்துக் கொண்ட அவர் கூறினார்.

சாங்காய் மாநகரில் மற்றொரு உணவு விடுதியை நிறுவ சலான்வாங்சிங் திட்டமிட்டிருக்கிறார். இது தொடர்பான தரவுகளை சாங்காய் மாநகரின் தொடர்புடைய வாரியங்கள் ஆராய்ந்திருக்கின்றன.

இதில் அக்கறையும் காட்டிருக்கின்றன. அமெரிக்கா, பிரான்சு, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் நண்பர்கள் அவருடன் கூட்டு சேர்ந்து உணவு விடுதியை நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.