• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-29 08:58:04    
புச்சோ நகரம்

cri

சீனாவின் புக்கியன் மாநிலத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் புதியென் நகர் அமைந்துள்ளது.

அதன் வடக்கில் மாநில தலைநகரான புச்சோ, தெற்கில் சுவான் சோ, சியா மன் ஆகிய நகரங்கள் உள்ளன.

அதற்கு எதிரே சீனாவின் செல்வ தீவான தைவான் உள்ளது. புதியென்னிலிருந்து புச்சோ சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது.

சியா மன் விமான நிலையத்துக்குச் சென்றால் 2 மணி நேரம் செலவழிக்க வேண்டும். உயர் வேக நெடுஞ்சாலை இந்நகரத்துக்கூடாகச் செல்கின்றது.

இந்நகரம் ஈடிணையற்ற மனிதப்பண்பாட்டு மற்றும் நிலவமைப்பைக் கொண்டிருக்கின்றது. புதியென் நகரில் காலநிலை சிறப்பாக உள்ளது.

இங்குள்ள மலைப்பிரதேசம் பயிர் வளர்ப்பு மற்றும் நீர் வாழ்வன வளர்ப்புத் தொழிலில் ஈடுபடத் தகுந்தது. குறிப்பாக பழ வகைகளைப் பயிரிடுவதற்கு ஏற்றது. மெச்சோ விரிகுடா எழில் மிக்கது.

இங்கு காலநிலை சிறப்பானது. அதன் கடற்கரை 120 கிலோமீட்டர் நீளமுடையது. இங்கு பெரிய ரக ஆழ் நீர் தங்கும் துறைகளைக் கட்டியமைக்க முடியும்.

மெச்சோ விரிகுடாவிலுள்ள மெச்சோ தீவுக்கும் தைவான் மாநிலத்தின் தைச்சொங் நகருக்குமிடையிலான தூரம், 72 கடல் மைல் மட்டுமே.