• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-23 13:59:39    
மருந்து 7

cri
அந்தப் பாதை வழியே இன்னொரு நரைத்த தலைப் பெண் கந்தலுடையில் வந்தாள். அவள் ஏந்திவந்த பழைய செந்நிற அரக்குக் கூடையில் காகிதப் பணச் சரம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. தட்டுத் தடுமாறி நடந்து வந்தாள். பெரிய சுவானின் மனைவி உட்கார்ந்தபடி தன்னைக் கவனிப்பதைக் கண்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் அவமானத்தின் சாயல் படர்ந்தது. ஆனாலும் அவள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, கடந்து சென்று இடது புறத்தில் இருந்த ஒரு புதிய புதை குழிக்கு முன்னால் தனது கூடையை வைத்தாள்.

அந்தப் புதைகுழி சின்னச் சுவானின் புதைகுழிக்கு நேரெதிராக இருந்தது. பாதை மட்டுமே இரண்டையும் பிரித்தது. அந்தப் பெண் நான்கு உணவு வகைகளையும் ஒரு கிண்ணம் சாதத்தையும் படைத்து காகிதப்பணத்தை எரித்தபடி ஒப்பாரி வைத்தபோது, பெரிய சுவானின் மனைவி நினைத்தாள். "அந்தப் புதை குழியில அவனோட மகனைத் தான் பதைச்சிருப்பாங்க."

அந்த முதிய பெண் தட்டுத்தடுமாறி சில எட்டுக்கள் எடுத்துவைத்தாள். திடீரென அவள் உடல் நடுங்கியது. தலைசுற்ற பின்னால் சாய்ந்தாள்.

துக்கம் தாங்க முடியலை, அதனாலதான் தள்ளாடுறா என்று நினைத்த பெரிய சுவானின் மனைவி பாதைக்கு குறுக்காகச் சென்று அந்த முதியவளின் அருகில் நின்றபடி, "அழாதே. வா. வீட்டுக்குப் போவோம்" என்றாள்.

மற்றவளும் தலையசைத்தாள். ஆனால், அவள் கண்கள் வெறிச்சிட்டு பார்த்துக் கொண்டே இருந்தன. மெல்ல முணுமுணுத்தாள். "அங்கே பாரு. அதென்ன?"

அவள் காட்டிய திசையில் பெரிய சவானின் மனைவி திரும்பிப் பார்த்தாள். அந்தப் புதைகுழி மேல் புல்கூட சரியாக முளைத்திருக்கவில்லை.

திட்டுத்திட்டாக பச்சை மண் தெரிந்தது. உற்றுநோக்கிய போது மண்கு வியலுக்குமேல் சிவப்பும் வெள்ளையுமாக ஒரு மலர் வளையம் இருந்தது.

இரண்டு கிழவிகளுக்குமே கண்பார்வை பிடிக்கவில்லை. ஆனாலும் சிவப்பு வெள்ளை மலர்களைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. மலர்கள் நிறைய இல்லை. ஆனால் வட்டமாக வைக்கப்பட்டிருந்தன. அவை வாடிப் போயிருந்தாலும் வரிசை குலையாமல் இருந்தன. சின்னச் சுவானின் அம்மா தனது மகனின் புதை குழியைத் திரும்பிப் பார்த்தாள். மற்றவற்றைப் போலவே ஒரு சில வாடிய பூக்கள் குளிரில் வதங்கிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு வகையான வெறுமை உணர்வு தோன்றியது. மலர் வளையம் பற்றிய பரபரப்பை மறந்தாள்.