1949ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை சீனத் திரைப்படத் தொழில் விரைவான வளர்ச்சி கண்டது. 1960ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஒரு விரைவான வளர்ச்சி காணப்பட்டது. 1963ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட பனி மலையிலிருந்து வந்த விருந்தினர் என்ற திரைப்படம் மிகவும் சிறப்பாக உள்ளது. இதில் மலர் ஏன் சிவப்பாக உள்ளது என்ற கருத்துப் பாடல் இன்று வரை பரவலாகப் பாடப்படுகிறது. இந்தப் பாடலில், சிவப்பான மலர், இளைஞர்களின் உண்மையான நட்புறவையும் காதலையும் காட்டுகிறது.
|