எழுதியவர் மதுரை என் இராமசாமி
2006ம் ஆண்டு சீன இந்திய நட்புறவு ஆண்டாகும். சீனாவும் இந்தியாவும் முன்பு எப்போதும் கண்டிராத அளவில் புதிய அத்தியாயத்தை உலக வரலாற்றில் எழுதி வருகின்றன. இந்தியாவும் சீனாவும் பொருளாதார அபிவிருத்தியில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. சீனாவும் இந்தியாவும் கலாச்சாரம் பண்பாடு, ஜனத் தொகை, பரப்பளவு ஆகியவற்றில் ஒத்த நாடாகும்.
உலகில் உற்பத்தி திறனில் சீனா முதல் இடம் வகிக்கின்றது. சீன மக்களின் அயராத உழைப்பும், குறைந்தபட்ச கூலியும் இதற்கு காரணியாக அமைந்துள்ளன. சுதந்திரம் அடைந்த பின்னர், சீனாவும் இந்தியாவும் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளன. உலக பொருளாதார வீழ்ச்சி ஆண்டு 1997லிருந்து மீண்டும் புத்துயிர் பெற்று சீனா உள் நாட்டு உற்பத்தியில் 9 விழுக்காடாகவும் இந்தியா 8 விழுக்காடாகவும் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கில புலமையை பயன்படுத்தி இந்தியா ஹை டெக்னாலஜியில் உயர்ந்துள்ளது. சீனா அண்டை நாடுகளுடன் சகோரத்தும், கூட்டாளி உறவை வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவும் சீனாவும் ஒற்றுமையாக செயல்பட்டு உலகில் வலிமை பெற்ற வல்லரசாக மாற வேண்டும் என்பது எனது விருப்பம்.
இந்த நூற்றாண்டை சீனாவுக்கும் இந்தியாவுக்கும் உரிய நூற்றாண்டு என கூறலாம். மேலும் இந்தியாவில் உள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு சீனாவை பற்றி அதிகமாகத் செரிய வில்லை. அதேபோல சீனாவிலும் இந்திய மக்களைப் பற்றி அதிகமாக தெரிவதில்லை. இந்த குறைகளை களைய நமது நாட்டிலுள்ள குறிப்பாக தமிழ் நாட்டிலுள்ள சீன வானொலி நேயர் மன்றங்கள் பாடுபட வேண்டும். இரண்டு நாட்டு மக்களுக்கு இடையே "நட்பு பாலமாக"செயல்பட வேண்டும். எனவே பிரச்சாரம் வாயிலாகவும் இரண்டு மக்கள் பிரதிநிதிகளை பரிமாற்றங்கள் செய்து கொள்வதன் வாயிலாகவும் இது சாத்தியமாகும் என கூற ஆசைப்படுகிறேன். எப்படியும் இரு நாட்டு மக்களும் அரசியல் தலைவர்களும் இணைந்து செயல்பட்டால் பெய்சிங் புதுடில்லி இரண்டு நகரங்களையும் இணைக்கும் பாலமாக இமயமலை மாறும். பாறையாக இருக்காது என்று மனப்பூர்வமாக கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். சீனா எந்த நாட்டிற்கும் அச்சுறுத்தலாக இல்லை என்பதை இந்தியர்கள் நம்புகிறார்கள். மேலும் இரண்டு நாட்டு தலைவர்களும் பிற நாட்டிற்கு விஜயம் செய்வதன் மூலமாகவும் பல உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதின் மூலமாகவும் தொடர்பை வலுப்படுத்தி கொள்ளலாம். இரு நாட்டிற்கு இடையே இன்னும் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஒன்று எல்லை பிரச்சினை, இரண்டு, சீனா பாகிஸ்தான் உறவு தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் இதனை தீர்த்துக் கொள்ளலாம். இரு நாட்டு ராணுவமும் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒரு நாட்டு படையினர் மற்ற நாட்டுக்குச் செல்லுதல், பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மூலமாக உறவை வலுப்படுத்தலாம்.
இந்தியா 1971ல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் சீனா சேர்வதற்கு ஆதரவு அளித்தது. அதேபோல் இந்தியா ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகச் சேர்வதற்கு சீனா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது என வேண்டுகோள்.
இரு நாட்டு தலைவர்களையும் மக்களையும் சீன வானொலி தமிழ் பிரிவு மூலம் கேட்டு கொள்வது என்னவெனில் ஒற்றுமையாக செயல்பட்டு வரும் ஆண்டுகளில் உலகில் சிறந்த வல்லரசாக திகழ சீனாவும் இந்தியாவும் பாடுபட வேண்டும்.
|