• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-14 11:36:37    
அழகான ஏல்டோஸ் புல்வெளி

cri

சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தென் பகுதியில், மஞ்சள் ஆறு வளைந்து சுழிந்து பாய்ந்து ஒருபீடபூமி உருவெடுத்தது. இதுவே புகழ் பெற்ற ஏல்டோஸ் புல்வெளியாகும். இப்புல்வெளி, சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த இக்சௌ நிர்வாகப் பகுதியில் அமைந்துள்ளது.

86 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நிர்வாகப் பகுதியில், மக்கள் தொகை 13 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அவர்களில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் மங்கோலிய இனத்தவராவர். இக்சௌ என்றால், மங்கோலிய மொழிலிய் பெரும் புத்தகோயில் என்பது பொருள். மங்கோலிய மொழியில் ஏல்டோஸ் என்பது, அதிகமான கூடாரங்கள் என்று பொருட்படுகின்றது.

15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சென்ஜெஸ்ஹென் எனும் பேரரசரின் கல்லறையைக் காவல் புரியும் மங்கோலிய இனத்தைச் சேர்ந்த ஏல்டோஸ் பழங்குடி மக்கள் இப்பிரதேசத்தில் குடியேறினர். காலம் போகப் போக, இப்பிரதேசம், ஏல்டோஸ் என்று அழைக்கப்படுகின்றது.

பண்டை காலத்தில் ஏல்டோல் ஆனது, ஏல்டோல் கடலாக விளஙக்கியது. பின்னர், தரை ஏற்றத்தினால், தற்போதைய ஏல்டோஸ் பீடபூமி உருவாயிற்று. சென்ஜெஸ்ஹென் என்ற பேரரசர், சீன வரலாற்றில் புகழ்பெற்ற ஆட்சியாளர்.

அவர் வாழ் நாள் முழுவதிலும் பல இடங்களைக் கைப்பற்றினார். அவர் ஏல்டோஸ் வழியாக மேற்கை நோக்கி படையெடுத்த போது, இங்குள்ள செழுமையைக் கண்டு வியந்து பாராட்டினார்.

அவர், அவ்விடத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லையாம். தம் குதிரைச் சவுக்கு கீழே விழுந்தது கூட அவருக்குத் தெரியவில்லையாம். நான் மரணமடைந்த பின் இங்கேயே புதைக்கலாம் என்று தமது தளபதிகளிடம் அவர் கூறினாராம்.

சென்ஜெஸ்ஹெனின் கல்லறை, ஏல்டோஸ் புல்வெளியின் இக்சௌ நிர்வாகப் பகுதியைச் சேர்ந்த இச்சிங்ஹொலு மாவட்டத்திலே உள்ளது. சென்ஜெஸ்ஹெனின் கல்லறை 40 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவுடையது. 3 மங்கோலிய பாணி மாளிகைகள் அதன் முக்கிய பகுதியாகும்.

இம்மாளிகைக்கு பின்னால் மஞ்சல் நிறப் பட்டுத்துணியுடன் கூடிய 4 மங்கோலிய கூடாரங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சென்ஜெஸ்ஹென், அவரது துணைவியர் சகோதரன் முதலியோரின் சவப் பெட்டிகள் உள்ளன. இம்மாவட்டத்தின் குபுஜி பாலைவனத்தின் நடுப்பகுதியில், அற்புதமான மாலைவனமொன்று உள்ளது.

மணல் சரிவு வழியாக கீழே சறுக்கினால், ஊ, ஊ என்ற ஓசையைக் கேப்பீர்கள். அது, உந்து வண்டியின் மோட்டார் ஓசை என்றும், விமானத்தின் இரையோசை என்றும் பியானோ ஓசை என்றும் மக்கள் பலவிதமாக கூறுவர்.

ஏல்டோஸ் புல்வெளியின் இயற்கை காட்சி, எழில் மக்கது. எல்லையற்ற புல்வெளி, தொலைவிலுள்ள வானத்துடன் ஒன்றிணைந்திருப்பதால், அது மிகவும் பரந்துவிரிந்து தென்படுகிறது. வெள்ளை வெளேர் என்ற பச்சைபசேர் என்ற புல்வெளியும் குதிரை மீது சவாரி செய்யும் ஆயர்களும் ஒரு அழகான ஓவியத்தை உருவாக்கியுள்ளனர்.

புல்வெளியில் குதிரையில் ஏறி சவாரி செய்தால், மனம் பூரித்து, அனைத்து கவலைகளையும் மறந்துவீர்கள். பரந்த ஏல்டோஸ் புல்வெளியில், ஸுய் மற்றும் தாங் வமிச காலத்திலான 12 நகரங்களும் 1622ல் கட்டியமைக்கப்பட்ட சென்கல்சௌவும் உள்ளன.

900 ஆண்டு பழமை வாய்ந்த தேவதாரு மரம் அங்கு வளர்கின்றது. வரலாற்று சிறப்பு மிக்க பண்பாட்டு இடங்களும் புல்வெளியிலுள்ள அழகான இயற்கை காட்சிகளும் இணைந்து, இவ்விடம் சுற்றுலாவுக்கான நல்ல இடமாக அமைகின்றது. ஆடல்-பாடலுக்கும் ஏல்டோஸ், உலகில் புகழ் பெற்றுவிளங்குகிறது.

ஆடல்-பாடலில் தேர்ச்சி பெற்ற ஏல்டோல் மக்கள், விருந்தோம்பல் மிக்கவர். மதிப்புக்குரிய விருந்தினர்கள் புல்வெளிக்கு வருகை தரும் போது, தேசிய இன ஆடைகளை அணிந்துகொண்ட மங்கோலிய இன மங்கைகள், ஹாடாவையும் வெள்ளிக் கிண்ணத்தையும் ஏந்திய வண்ணம், மங்கோலிய கூடாரத்துக்கு முன் நின்றவாறு வாழ்த்துப் பாடலைப் பாடுவதோடு, இனிய மதுவையும் விருந்தினர்களுக்கு அள்ளித் தருவர்.

பாடலைப் பாடி முடித்தவுடன், ஒம்புநர்கள், விருந்தினர்களை மங்கோலிய கூடாரத்துக்குள் அழைத்துச்செல்வர். அவர்கள் பாடிக்கொண்டே, மதுவையும் சுவையான ஆட்டிறைச்சியையும் சுவைத்துச் சாப்பிடுவர். ஏல்டோஸ் புல்வெளியிலுள்ள பழமை வாய்ந்த பழக்க வழக்கங்கள், எழில் மிக்க இயற்கைக் காட்சி ஆகியவை, பயணிகளின் உள்ளங்களில் ஆழப்பதிந்துவிடும்.