• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-25 22:04:08    
உலகக் கோப்பை கூடைப்பந்து

cri

24 நாடுகள் பங்கேற்கும் உலக கூடைபந்து போட்டியின் முதற்கட்ட பந்தயங்கள் முடிந்து அடுத்த சுற்றில் பங்கேற 16 அணிகள் தேர்வாகியுள்ளன.

நைஜீரியா, லெபனான், அர்ஜென்டினா, பிரான்ஸ், வெனிசுவேலா, செர்பியா மற்றும் மான்டநீக்ரோ ஆகிய நாடுகள் இடம்பெற்ற ஏ குழுவில் முதற்கட்ட போட்டியில் விளையாடிய 5 பந்தயஙளிலும் வென்று 10 புள்ளிகள் பெற்ற அர்ஜென்டினா தவிர பிரான்ஸ், நைஜீரியா, செர்பியா மற்றும் மான்டநீக்ரோ ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

பனாமா, நியூசிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், அங்கோலா ஆகிய நாடுகள் இடம்பெற்ற பி குழுவில் முதற்கட்ட போட்டியில் விளையாடிய 5 பந்தயஙளிலும் வென்று 10 புள்ளிகள் பெற்ற ஸ்பெயின் தவிர நியூசிலாந்து, ஜெர்மனி, அங்கோலா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

கத்தார், ஆஸ்திரேலியா, துருக்கி, லித்துவேனியா, பிரேசில், க்ரீஸ் ஆகிய நாடுகள் இடம்பெற்ற சி குழுவில் முதற்கட்ட போட்டியில் விளையாடிய 5 பந்தயஙளிலும் வென்று 10 புள்ளிகள் பெற்ற க்ரீஸ் அணியைத் தவிர ஆஸ்திரேலியா, துருக்கி, லித்துவேனியா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

செனகல்,அமெரிக்கா, சீனா, இத்தாலி, போர்ட்டோ ரிகொ, ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் இடம்பெற்ற டி குழுவில் முதற்கட்ட போட்டியில் விளையாடிய 5 பந்தயஙளிலும் வென்று 10 புள்ளிகள் பெற்ற அமெரிக்கா தவிர சீனா, இத்தாலி, போர்ட்டோ ரிகொ, ஸ்லோவேனியா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த 16 அணிகளிலிருந்து 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி:

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 10ம் நாள் வரை நடைபெறவுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்ட போட்டியில் மகளிர் பிரிவில் விளையாட சினாவின் லீ நா மற்றும் ஷெங் சியே ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆண்கள் 64 பேர், பெண்கள் 64 பேர் போடியிடும் ஒற்றையர் ஆட்டத்துக்கான தெரிவில் சீனாவின் லீ நா பெண்கள் பிரிவில் 24வது இடத்திலும், ஷெங் சியே 29வது இடத்திலுமாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 64 பேர் இருவர் இருவராக 32 ஜோடிகளாக பிரிக்கப்பட்டு போட்டியின் முதற்கட்டத்தில் விளையாடி, வெற்றி பெறுபவர் இரண்டாவத் சுற்றில் முன்னேறி பிறகு மூன்றாவது சுற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று, அதன் பின் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்று என விளையாடுவர். ஆண்கள் பிரிவிலும் இதே முறையில் போட்டி நடைபெறும்.கிராண்ட் ஸ்லாம் எனப்படும் பெரிய பரிசுத் தொகை கொண்ட பிரபல போட்டி ஒன்றில் ஒரே சமயத்தில் இரு சீன விராங்கனைகள் இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும். தற்போதைய மகளிர் டென்னிஸ் உலகத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் அமேலி மௌரெஸ்மோ தற்போது இவ்வாண்டின் ஆஸ்திரேலிய மற்றும் விம்பிள்டன் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள நிலையில் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றால் 2003ம் ஆண்டில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸுக்கு பிறகு இதுவரை யாரும் செய்யாத ஒரு சாதனையை செய்தவராவர். உலகத் தரவரிசையின் இரண்டாவது இடத்தில் உள்ள பெல்ஜிய நாட்டு கிம் கிளைஸ்டர்ஸ் மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் இவ்வாண்டு அமெரிக்க ஓபன் போட்டியில் கலந்துகொள்ளவில்லை.

சீன டென்னிஸ் வீராங்கனை லீ நா முதற்சுற்றில் ஸ்பெயின் நாட்டு மரியா சான்சேஸ் லொரென்ஸோவை எதிர்கொள்கிறார். ஷெங் சியே செக் குடியரசு நாட்டின் க்வேடா பெஷ்கே என்பவரை எதிர்கொள்கிறார். இவர்கள் தவிர சீனாவின் பெங் ஷுவேய் மற்றும் சுன் தியந்தியன் ஆகியோரும் முதற் சுற்றில் விளையாடும் 64 பேரில் இடம்பெற்றுள்ளனர்.