• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-25 17:36:23    
9 முக்கிய கிரகங்களிலிருந்து pluto கிரகம் விலகியது.

cri
செக்கின் தலைநகரான பிராக்கில் நேற்று நடைபெற்ற சர்வதேச வானியல் சம்மேளனத்தின் 26வது முழு அமர்வில் கிரகம் என்றால் என்ன என்பது பற்றிய புதிய தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய தீர்மானத்துக்கிணங்க, சூரிய மண்டலத்தில் 8 கிரகங்கள் உள்ளன. ப்ளுட்டோ கிரகம் சூரிய மண்டலத்தின் 9 கிரகங்களிலிந்து நீக்கப்பட்டு, குட்டிக் கிரகம் என்ற புதிய பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகின் 75 நாடுகள் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த 2500 வானியல் நிபுணர்கள் நேற்றைய வாக்கெடுப்பில் பங்குகொண்டனர். புதிய தீர்மானத்தின் படி, சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள், கிரகம், குட்டிக் கிரகம், சூரிய மண்டலத்தைச் சேர்ந்த சிறிய தொகுதி ஆகிய 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1930ஆம் ஆண்டில் குட்டிக் கிரகமான ப்ளுட்டோ கண்டுபிடிக்கப்பட்டது முதல் இதுவரை, இதர கிரகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அதன் உண்மையான கன அளவும் தரமும் குறைவான அளவில் இருப்பதால் அதன் தகுநிலை சர்ச்சைக்குரிய பிரச்சினையாக நீடித்தது.
புதிய தீர்மானத்தின் படி, சூரிய மண்டலத்தில் 8 கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. அவை மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய், ஜுபிடர், சனி கிரகம், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை ஆகும்.
சீனாவின் பெய்ச்சிங் மாநகரம், 2012ஆம் ஆண்டு சர்வதேச வானியல் சம்மேளனத்தின் 28வது மாநாட்டை நடத்தும் அதிகாரம் பெற்றுள்ளதாக சர்வதேச வானியல் சம்மேளனத்தின் தலைவர் ரோனல்ட் எக்கர்ஸ் அறிவித்தார்.