
சம்சொங் 102 அங்குலம், எல் ஜி 102 அங்குலம், பேனசானிக் 103 அங்குலம். இவை, பல்வேறு வணிக நிறுவனங்கள் காட்சிக்கு வைத்துள்ள மிக தெளிவான plasma தொலைக்காட்சிப் பெட்டிகளின் அளவுகளாகும். போட்டியின் முடிவில், 103 அங்குலம் அளவுடைய பேனசானிக் தொலைக்காட்சிப் பெட்டியே உலகில் மிக பெரிய plasma தொலைக்காட்சிப் பெட்டியாக விளங்குகின்றது. இவ்வளவு பெரிய தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க எவ்வளவு பெரிய அறை இருக்க வேண்டும் என்று பார்வையாளர் ஒருவர் சிரிப்புடன் கேட்டார்.
இது ஒரு மாதிரி பெட்டிதான், இவ்வளவு பெரிய திரையுடைய தொலைக்காட்சி பெட்டி இன்னும் உற்பத்தி செய்யப்படவில்லை. என்று இந்த கேள்விக்குப் பதிலளிக்கையில் பேனசானிக் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் கூறினார். இந்த தொலைக்காட்சிப் பெட்டியின் தயாரிப்பில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள fluorescent powder உம் மிக பெரிய integrated circuit ஐ. சி. தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெரிய திரையைத் தயாரிப்பதில் நிலவிய பல குறைபாடுகள் சமாளிக்கப்பட்டன.
இதனால் இந்த திரையின் சரிசமமான ஒளி அளவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பேன சானிக் நிறுவனத்தின் அதிகாரி விளக்கினார். மிக சிறிய செல்லிட கணிணி சம்சொங் நிறுவனம் தயாரித்த Q1 என்னும் மிக சிறிய செல்லிட கணிணியின் திரை உள்ளங்கை அளவுடையதாக மட்டுமே இருக்கிறது. பணியாளர்கள் 7 அங்குலமுடைய ஒரு செல்லிட கணிணியை 102 அங்குலமுடைய ஒரு தொலைக்காட்சிக்கு முன்னால் வைத்துள்ளதால், இந்த கணிணி மேலும் சிறியதாக காணப்படுகின்றது.
இதனால் பல பார்வையாளர்கள் இப்பக்கத்துக்கு ஈர்க்கப்பட்டுள்ளனர். இது ஒரு விளையாட்டு கருவி என்று நினைத்தேன். இதை ஒரு கணிணியாக நான் நினைக்கவே இல்லை என்று ஒரு சிறுமி தனது நண்பரிடம் கூறினார். பல பார்வையாளர்கள் தமது உள்ளங்கையால் இந்த கணிணியின் திரையை மூடுகின்றனர். அல்லது தனது செல்லிட தொலைபேசியை இந்த கணிணியுடன் ஒப்பிடுகிறார்கள் என்பதை செய்தியாளர் ஒருவர் கவனித்திருக்கின்றார். இந்த கணிணி ஜுன் திங்களில் அதிகாரபூர்வமாக விற்கப்படும். அதன் விலை 11 ஆயிரத்து 988 யுவானாகும்.
|