• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-07 15:41:49    
உலக  வைரக்கல் மையம்

cri

பெல்ஜியத்தின் அண்டவிப் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமாகும். உலக வைரக்கல் மையம் என்று அழைக்கப்படுவதால் அது மேலும் மக்களைக் கவர்கிறது. உலகில் பத்து வைரக்கல்களில் 7 இந்த நகரில் பட்டை தீட்டப்படுகின்றன. என்று கூறப்படுகின்றது. அண்டவிப் நகரின் மிக பெரிய வைரக்கல் கடையின் 1000 சதுர மீட்டர் பரப்புடைய காட்சி அறையில் வைரக்கல் பட்டை தீட்டப்படுவதை இலவசமாக பார்வையிடலாம்.

இந்த நகரில் தயாரிக்கப்பட்ட வைரக்கல் வரி விலக்கு என்ற சலுகையுடன் ஏற்றுமதி செய்யப்படலாம். அண்டவிப் நகரின் வைரக்கல் பட்டை தீட்டும் வெட்டு கலை உலகில் முதல் தரமுடையது. அங்குள்ள மக்கள் இதனால் பெருமைப்படுகிறார்கள். இந்தத் தீட்டும் வெட்டு முறை ஏற்கனவே 600 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றது. பட்டை தீட்டப்பட்ட வைரக்கல் மேலே 33 பக்கங்களும் கீழே 24 பக்கங்களும் கொண்டுள்ளது. இந்த வடிவ வைரக்கல் மிகவும் ஒளிமயமானது.

இந்த வடிவம், உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பத்து கிராமுடைய ஒரு வைரக்கல் அண்டவிப் கலைஞர்களால் பட்டை தீட்டப்பட்ட பின், அதன் எடை 5 கிராம் மட்டும் இருக்கும். மற்ற 5 கிராம் எல்லாம் சிதறிவிடும். அண்டவிப் நகரில் உள்ள வைரக்கல் தெரு, S வடிவில் உள்ளது. மொத்தம் 4 வைரக்கல் விற்பனை மையங்களில் 3 இந்த தெருவில் உள்ளன. 300 நிறுவனங்களின் வைரக்கல் விற்பனை மையத்தில், ஒரு மின்னணு சாவடியில் நுழைவு அட்டை காட்டிய பிறகு தான் நுழைய முடியும்.

வைரக்கல் தெருவில் வைரக்கல்களைப் பார்க்க முடியாது. ஏனென்றால், விற்பனை உள்ளேதான் நடைபெறுகின்றது. ஒரு கிராம் எடையுடைய தரமான உருண்டை வடிவமான வைரக்கல்லின் விலை 18 ஆயிரம் ரென்மின்பி யுவான் முதல் 29 ஆயிரம் ரென்மின்பி யுவானாக இருக்கும் என்று தெரிகிறது. யானைகள் தொடர்பு கொள்வது யானைகள் பொதுவாக இரண்டு நேரப் பகுதிகளில் பரஸ்பரம் தொடர்பு கொள்கின்றன.

சூரியன் மறைந்த 3 மணி நேரத்திலும் சூரியன் உதித்த 2 மணி நேரத்திலும் காற்று இடுக்கு இடுக்காக இருக்கின்றது. இந்த நேரப் பகுதிகளில் வெப்பம் மற்றும் எதிர் திசை காற்று இடுக்கு மூலம் ஒலி தரையை அடைந்து, வெகு தூரமாக பரப்பும். ஒரு யானை எழுப்பிய ஒலி 3 கிலோ மீட்டர் தொலைவில் கேட்க முடியும். அமெரிக்க ஃபுஜினியா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர் ஒருவர், வானிலை சாதனங்கள் மற்றும் ஒலி பெருக்கி மூலம் இதை கண்டறிந்தார்.