ஆஸ்கர் பரிசுக்கான திரைப்படத் தெரிவுக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே ஒரு கீழை நாட்டு அமெரிக்கர் லு யே. தற்போது 79 வயதான போதிலும். மிக புகழ்பெற்ற சீன நடிகையான அவர், இப்போதும் அழகியாக இருக்கிறார் என்று சில செய்தி ஏடுகள் மதிப்பிட்டுள்ளன. பெய்சிங்கில் பிறந்த அவர் 1947ம் ஆண்டு, அமெரிக்காவின் Honoluluக்கு குடிபெயர்ந்தார். 1956ம் ஆண்டு,கலிபோர்யா மாநிலத்தில் ஒரு புகழ்பெற்ற இசை நாடகக் கல்லூரியில் சேர்ந்து மேலும் கற்றுக் கொண்டார். பயிற்சி முடிந்ததும், அவர் நடித்த ஆகஸ்ட் தேயிலை விடுதி அறை என்னும் நாடகம் வெற்றி பெற்றது. அவருடைய நடிப்புத் திறன், வெகுவாக்ப் பாராட்டப்பட்டது.
இதற்கு பின்னர், அவர் Hollywood படங்களில் நடிக்க துவங்கினார். திரைப்பட இயக்குநர் பஃராக் பொசினிக்கி, ஒஸ்கர் மன்னர் என அழைக்கப்பட்ட மார்லன் பிராண்டோ( Marlon Brando) ஆகியோருடன் சேர்ந்து, சிறந்த கலைத் திறமையை வெளிப்படுத்தி புகழ்பெற்ற நடிகையாக மாறினார். அவருடைய இளம் வயதில் சீனாவில் வெளி நாட்டுத் திறப்பு தொடங்க வில்லை. ஆனாலும் மேற்கு-கிழக்கு பண்பாடுகளுக்குமிடையே உள்ள இடைவெளியை அவர் உணர்ந்தார். எனது இளம் பருவத்தில், திரைப்படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன் சீன பற்றிய திரைப்படங்கள் குறைவாக இருந்தன. அமெரிக்கர்கள், சீனாவைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளவில்லை, இப்போது இருப்பதை விட வெளி நாட்டு திறப்பு, குறைவாக இருந்தது. அவர்கள் சீன பண்பாடு பற்றி அரைகுறையாக அறிந்து கொண்டனர். ஆனால் எனக்கு அமெரிக்காவில், ஒரு சீன நாடக நூல் கிடைத்தது பண்பாட்டின் தூண்டுதலால் அதைப் பரித்துப் பார்த்தேன். திரைப்பட இயக்குநரிடம் அது பற்றிக் கூறஇனேன். பயனில்லை என்றார். 1986ம் ஆண்டு, அமெரிக்காவில் தாயரிக்கப்பட்ட The Last Emperor என்னும் திரைப்படத்தில் கதாநாயக ச்சி சியாக அவர் நடித்தார். இத்தாலியின் புகவ்பெற்ற திரைப்பட இயக்குநர் பெர்னாடோ பெர்ட்டோ லூசியுடன் ஒத்துழைத்த போது, அடிக்கடி விவாதிக்க வேண்டியிருந்தது.
இதன் விளைவாக 1987ம் ஆண்டு, இத்திரைப்படம், மிகச் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் பரிசை வென்றது. பின்னர், பல சீன மொழித் திரைப்படங்களில் அவர் நடித்தார். மக்களால் மறக்க முடியாத பாத்திரங்களை அவர் ஏற்று நடித்தார். மூன்று முறை, சீன வரலாற்றில் புகழ்பெற்ற ச்சி சி என்னும் பேராசிரியராக லு யே, நடித்துள்ளார். தைவான் திரைப்படத்துறையின் தங்க குதிரை பரிசை, அவர் மூன்று பெற்றார். தவிரவும், அவர் நடித்த திரைப்படம், மேடை நாடகம், தொலைகாட்சி நாடகம், ஆகியவற்றின் எண்ணிக்கை, 200க்கு அதிகமாகும். பத்துக்கும் மேற்பட்ட அதிகமான பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார்,
|