காற்று தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்துவது
cri
2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்யும் பெய்சிங் மாநகரில், அடுத்த சில ஆண்டுகளில், காற்று தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்த, மேலும் வலிமைமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சீனத் தேசிய மக்கள் பேரவையின் சுற்றுச்சூழல் மற்றும் மூலவள பாதுகாப்பு கமிட்டியின் தலைமை உறுப்பினர் Mao Ru Bai கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் பேசிய அவர், தற்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கென ஆண்டுதோறும் பெய்சிங் மாநகராட்சி ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கி வைத்துள்ளது. இதில் மூன்றில் இரண்டு பகுதி தொகை, காற்று தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது என்றார். அடுத்த சில ஆண்டுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முதலீட்டை பெய்சிங் மாநகராட்சி தொடர்ந்து அதிகரித்து, மூலவள கட்டமைப்பை மேம்படுத்தி, இயற்கை வாயு உள்ளிட்ட தூய்மையான எரியாற்றலின் பயன்பாட்டை உயர்த்தும் என்று Mao Ru Bai கூறினார்.
|
|