சிங்காய்-திபெத் ரெயில் பாதை, இறுதியில் சீன-நேபாள எல்லைக்குச் செல்லும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் Xiang Ba Ping Cuo கூறியுள்ளார். இன்று லாசாவில் நேபாளத்தின் துணை தலைமையமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான K.P. Sharma Oliஐச் சந்தித்துரையாடிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சிங்காய்-திபெத் ரெயில்பாதையின் முதலாவது கிளி, அடுத்த ஆண்டில் கட்டியமைக்கப்படத் துவங்கும். திபெத்தின் இரண்டாவது பெரிய நகரான சிகாச்சே செல்லும். மூன்றாண்டுகளில் இது கட்டிமுடிக்கப்படவுள்ளது. சீன-நேபாள எல்லையிலிருந்து 400 கிலோமீட்டருக்கு அதிகமான தொலைவில் சிகாச்சே நகரம் அமைந்துள்ளது. இதுவும் ரெயில்பாதையால் இணைக்கப்படும். திபெத்துக்கும் தென்னாசிய நாடுகளுக்குமிடையிலான பொருளாதார தொடர்பை இது விரைவுபடுத்தும் என்று அவர் சொன்னார். ரெயில்பாதை, சீன-நேபாள எல்லைக்குச் செல்ல வேண்டும் என்று நேபாள அரசும் விரும்புகின்றது. தவிரவும், சீனாவுடன் இணைந்து இதை நனவாக்க விரும்புவதாக, Oli தெரிவித்தார்.
|