• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-29 17:09:42    
பெருங் குடல் புற்றுநோய் தடுப்பு

cri
கிளீட்டஸ்......பெருங்குடல் புற்று நோய் மிக கடுமையான புற்று நோயாகும். அதன் தோன்றுதல் விகிதம் உலகின் வெவ்வேறான இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப உள்ளது. வட அமெரிக்கா, அட்லாண்டிக், ஐரோப்பா ஆகிய வட்டாரங்களில் பெருங் குடல் புற்று நோய் நிகவும் விகிதம் உயர்வானது.

கலை.....ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இந்த நோயின் தாக்கம் குறிப்பிட்ட அளவில் குறைவானது.

கிளீட்டஸ்......ஆனால் கடந்த 20க்கும் அதிகமான ஆண்டுகளில் பெரும்பான்மையான நாடுகளில் பெருங் குடல் புற்று நோய் பரவல் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.

கலை.....இந் நிலைமை மருத்துவவியல் ரீதியில் பார்த்தால் இதற்கும் வாழ்க்கை தரத்தின் சீர்மைக்கும், உணவு கட்டமைப்புக்கும், வழக்கங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு.

கிளீட்டஸ்......கலை நீங்கள் சொன்னது சரிதான். உணவு கட்டமைப்புக்கும் புற்று நோய் நிகழ்வுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கலை.....அப்படியிருந்தால் எந்த வகை உணவு பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை தூண்டுகின்றன?அன்றாட வாழ்வில் நாம் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும்?

கிளீட்டஸ்.......விளக்கம் கூறுவதற்கு முன் பெய்சிங்கில் பணிபுரின்ற திரு யென் சியன் சியுவானின் உடல் நலத்தை பார்ப்போம்.

கலை......திரு யென் இவ்வாண்டு 62 வயதான முதியோராவர். அதேவேளையில் அவர் பெருங்குடல் புற்று நோயாளியும் ஆவார். எந்த காரணத்தால் அவர் இந்த நோயால் அல்லல்படுகிறார் என மீனாய்வு செய்யும் போது உணவு உட்கொள்ளும் வழக்கம் சரியில்லை என்பது நோய் ஏற்படுவதன் முக்கிய காரணமாகும். இது பற்றி அவர் கூறியதாவது

கிளீட்டஸ்......காய்கறி மிக குறைவாக உட்கொண்டேன். 1982ம் ஆண்டு முதல் 86ம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகளில் நான் ஹாங்காங்கில் வேலை செய்த போது மெக்ட்டானல்ட்ஸ், முன்தயாரிப்பு நூடுல்ஸ், ஹாம்பர்கர் போன்ற உணவு பொருட்களை மிக அதிகமாக உட்கொண்டேன். குறிப்பாக வெண்ணெய் மிகவும் விரும்பி உட்கொண்டேன்.

கலை......நீங்கள் பாருங்கள். திரு யென் உட்கொண்ட உணவு பொருட்களில் நார்ச்சத்து fibre மிக குறைவு. இந்த நார்ச்சத்து பற்றாக்குறையான உணவு பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும்.

கிளீட்டஸ்.....வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றிலுள்ள சில நாடுகளில் வாழ்கின்ற மக்கள் திரு யென் போல இந்த நார்ச்சத்து குறைவான உணவு பொருட்களை உட்கொள்ள விரும்புகின்றனர். ஆகவே பெருங்குடல் புற்று நோய் நிகழ்வும் விகிதம் அதிகம்.

கலை....நார்ச்சத்து குறைவான உணவு பொருட்கள் ஏன் பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம்?

கிளீட்டஸ்......பெய்சிங்கின் சியூன் மருத்துவ மனையின் கட்டி நோய் துறையில் பணிபுரிகின்ற டாக்டர் யான் யூ பிஃ தெரிவித்த கூற்றை கேளுங்கள்.