• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-29 17:09:42    
தைவான் பாணி முட்டை கோசு

cri
கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நேரம். ராஜாராம், கலையரசி இருவரும் இந்த நிகழ்ச்சியில் புளிப்பும் காரமும் மிக்க முட்டை கோசு கறி பற்றி கூறுகின்றோம்.

ராஜா......கலை இந்த காய்கறி சமையல் புதியது. அப்படிதானே.

கலை.....ஆமாம். சீனாவில் சாதாரண காய்களை பயன்படுத்தி பல்வகை சுவையான உணவு சமைக்க முடியும்.

ராஜா........நீங்கள் சொல்வது சரிதான். சீனாவில் பல்வகை காய்கறி ஊறுகாய்கள் மிகவும் சுவையானவை. அண்மையில் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கும் போது ஒரு வகை காய் பார்த்தேன். தோற்றத்தை பார்த்தால் அழகாக உள்ளது. அதன் ருசி பரவாயில்லை என்று பொருட்களை வாங்க என் பக்கத்தில் இருந்த பெண்மணி என்னிடம் கூறினார்.

கலை........ராஜா அந்த காயின் பெயர் உங்களுக்கு தெரியுமா?

ராஜா......தெரியும். சீன மொழியில் தாவான் போ சை என்று சொன்னார்கள்.

கலை........எனக்கு புரிந்தது. அது முட்டை கோசுதான். ஆனால் நன்கு ஊறவைக்கப்பட்ட ஒரு வகை இனிப்பு புளிப்பு மிக்க கோசு.

ராஜா........நீங்கள் சொல்வதைக் கேட்டால் இதை எப்படி தயாரிப்பது என்று உங்களுக்கு தெரியும் என்று தெரிகின்றது.

கலை.......உண்மையில் எனக்கு இந்த காய் மிகவும் பிடிக்கும். வீட்டில் அடிக்கடி சமைத்து உண்கிறேன்.

ராஜா..........தமிழகத்தில் முட்டை கோசு அதிகம். கூட்டு பொறியல் என்று வகையாகச் சமைத்து உண்கிறார்கள். சீன முறையில் இதை தயாரிக்கும் முறை பற்றி நமது நிகழ்ச்சியில் நண்பர்களுக்கு சொல்லலாமே.

கலை.........சரி நான் முதலில் நீங்கள் சூப் மாக்கிட்டில் பார்த்த தைவான் போ சை எப்படி தயாரிப்பது பற்றி சொல்கின்றேன்.

ராஜா.......சொல்லுங்கள்.

கலை........முட்டைகோசு ஒன்று அல்லது இரண்டை உங்கள் விருப்பத்தின் படி எடுங்கள். உப்பு தேவையான அளவில் எடுங்கள்.

ராஜா.......முட்டை கோசு உப்பு, ஆகியவை தவிர வேறு என்ன பொருட்கள் தேவை?

கலை.......அரை கோபை சர்க்கரை, அரை கோப்பை வினிகர், 4 அல்லது 5 பூண்டு துண்டுகள், மிளகாய் ஒன்று, 3 கோப்பை தண்ணீர், காகித கோபை ஒன்று.