• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-28 16:31:44    
அதிவேக ஓட்ட நாயகன் ஜஸ்டின் காட்லினுக்கு 8 ஆண்டு தடை

cri

தடகள விளையாட்டு போட்டிகளில் பல்வேறு விளையாட்டுகள் பிரபலமானவை, உலகளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவை என்றாலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் கூடுதல் கவனத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவது நாம் அனைவரும் அறிந்தததே. அதிலும் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உலகின் வேகமான மனிதரை நிர்ணயிப்பதாக கருதப்படுகிறது. இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், ஜமைக்காவின் அசாஃபா பாவல் இருவரும் கடுமையான போட்டியிடும் திறமையாளர்கள். இவர்கள் இருவரும் பங்குபெறும் பந்தயம் என்றால் உலகின் கண்களும், கவனமும் வெற்றி யாருக்கு என்று தெரியும் வரை வேறு பக்கம் திரும்பாது. மிக பிரபலமான இந்த இருவரும் நீ முந்தி நான் முந்தி என்று உலக சாதனையையும் முறியடித்திருக்க, இவர்களின் பெயர்களும், இவர்கள் பங்குபெறு பந்தயங்களும் தலைப்புச் செய்திகளாவது இயல்பான ஒன்றாகிவிட்டது. 9.77 என்ற உலக சாதனை அளவை ஜமைக்காவின் அசாஃபா பாவல் பதிவு செய்ததை கடந்த மே 12ம் நாள் டோஹாவில் அதே 9.77 என்ற நேரத்தில் 100 மீட்டர் அல்லைக்கோட்டை கடந்து தனது பெயரையும் உலக சாதனையை இணத்தார் ஜஸ்டின் காட்லின். 

அதற்கு பின் இருவரும் ஒன்றாக எந்த பந்தயத்திலும் ஓடவில்லை. ஒரே போட்டியில் வெவ்வேறு பிரிவில் ஒருமுறை ஓடினர் ஆனால் புதிய சாதனைகள் ஏதும் படைக்கவில்லை. அடுத்து எப்போது சாதனை படைக்கபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உலக ரசிகர்களிடையே இருக்க, சாதனைக்கு பதிலாக சோதனை வந்ததுள்ளது ரசிகர்களுக்கு. ரசிகர்களை விட அமெரிக்காவின் மின்னல் வேக ஓட்ட நாயகன் ஜஸ்டின் காட்லினுக்கு பேரிடியாக வந்தது ஒரு செய்தி. ஊக்க மருந்து பயன்படுத்தியதாக அவரது சிறுநீர் சோதனையின் முடிவு வெலியிடப்பட்ட பின் கேள்வியாக நின்ற அவரது நிலை தற்போதூ எந்த குழப்பமும் இல்லாத தெளிந்த வானமாயிருக்கிறது. ஆனால் இந்த தெளிவில் ஜஸ்டின் காட்லின் 8 ஆண்டுகால தடையை அனுபவிக்க வேண்டிய நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் விதியின் படி ஜஸ்டின் காட்லின் அமெரிக்க நாட்டு ஊக்கமருந்து தடுப்பு அமைப்போடு சோதனை தொடர்பாக ஒத்துழைக்காமலிருந்தால் வாழ்நாள் முழுதும் தடை விதிக்கப்பட்டிருக்ககூடும், ஆனால் இந்த சோதனை தொடர்பாக இரண்டாம் கட்ட சோதனை முடிவு வரையிலும் ஜஸ்டின் காட்லின் ஒத்துழைப்பு நல்கியதால் 8 ஆண்டுகால தடை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 24 வயதாகும் ஜஸ்டின் காட்லின் தனது 32வது வயது வரை எந்த சர்வதேச ஓட்டப்பந்தயத்திலும் கலந்துகொள்ளவியலாது. அவரது உலக சாதனை ஓட்டமான டோஹாவில் படைத்த 9.77 என்ற சாதனை ஓட்டமும் தள்லுபடி செய்யப்படும் அல்லது அந்த சாதனையை இனி அசாஃபா பாவல் மட்டுமே உரிமை கொள்வார்.