வடமேற்கு சீனாவிலுள்ள சான் சி மாநிலத்தின் தலைநகரான சி ஆன்னின் புறநகரின் இயற்கைச் சூழலும், வேளாண் பண்ணைகளும், மலர் பூங்காக்களும் தனிச்சிறப்புடன், நகரவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.
சி ஆன்னின் புறநகரிலுள்ள மாதிரிப்பண்ணைகளில், விடுமுறை நாட்களில் நடைபெறும் பழம்பறிப்பு விழா, கிராமப்புற தனிச்சிறப்புடையது. இது, நகரவாசிகளை பெரிதும் ஈர்க்கிறது. இவ்வாறாக, நகர வேளாண்மை, வேளாண் மூலவளத்தை சுற்றுலாவுடன் இணைக்கிறது. நகரவாசிகள் இங்கே வந்து, மலைக் காற்றை அனுபவித்து, மாசுபடாத உணவுவகைகளைச் உண்டு, கிராமத்தின் இயற்கை எழில் காட்சிகளை கண்டு அளிக்கின்றனர். நகரவாசிகளுக்கு பல்வகை விளை பொருட்களையும் சேவையையும் வழங்குவதால், விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகிறது.
முதன்முதலில் நகர வேளாண்மை என்ற கருத்தை, கடந்த நூற்றாண்டின் 50, 60ம் ஆண்டுகளில் அமெரிக்காவின் பொருளியல் அறிஞர்கள் முன்வைத்தனர். நகர வேளாண் துறையின் உற்பத்தியும், விற்பனையும், நகரத்துக்கு சேவை வழங்குவதை முக்கியமாக கொள்ள வேண்டும். நகர வேளாண் துறை, நவீன வேளாண்மையின் புதிய மாதிரியாகவும், பாரம்பரிய வேளாண்மையின் புதிய வளர்ச்சியாகவும் இருக்கிறது என்று, சி ஆன் வேளாண் அறிவியல் ஆய்வகத்தின் துணை தலைவர் சாங் சியுவான் ஹேள கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
நகர வேளாண் துறை, பாரம்பரிய வேளாண்மையிலிருந்து நவீன வேளாண்மை என்ற புதிய வளர்ச்சி நிலையை அடந்துள்ளது. வேளாண்மையை ஒரு தொழிலாக இது வளர்ப்பது, குறிப்பிடத்தக்கது என்றார் அவர்.
சுற்றுலா வேளாண்மையும், இயற்கை சூழல் வேளாண்மையும், நகர வேளாண்மையில் இடம்பெறுகின்றன. நகரத்துக்கு விளை பொருட்களை வழங்குவது மட்டுமல்ல, நகரவாசிகளுக்கு, பொழுதுபோக்கு வசதிகளையும், தூய்மையான சூழலையும் தருவது, அதனுடைய தனிச்சிறப்பாகும்.
நகர வேளாண் துறை, மேலும் அதிகமான பயனளிக்கிறது. சி ஆன்னின் வே யியாங் வட்டாரத்தில் அமைந்துள்ள சுமார் ஆயிரம் ஹெக்டர் பீச் தோட்டம், நகரவாசிகளின் பூங்கா என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஏராளமான பயணிகள் இங்கே வருகின்றனர். இவ்வட்டாரத்து பழத்தோட்ட நிலையத்தின் துணைத் தலைவர் ஹுவாங் சியேள கூறியதாவது:
1986ம் ஆண்டு முதல், இங்கு, பீச் தோட்டம் உருவாக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக, பீச் பழங்கள் நன்றாக விற்பனையாகின்றன. ஆண்டுதோறும், பீச் மலர் விழாவும் பழங்களைப் பறிக்கும் விழாவும் நடைபெறுகின்றன. நகரவாசிகள் பலர், பீச் மலர்களைக் கண்டுகளிக்க, இங்கே வருகின்றனர் என்றார் அவர்.
பாரம்பரிய வேளாண் துறையுடன், அறிவியல் தொழில் நுட்பத்தின் புதிய கருத்துகளும், முதலீடும் சேர்ந்து, எதிர்பாராத சாதனை படைக்கிறது. சீனாவின் வடமேற்கு சமவெளியில் அமைந்துள்ள சி ஆன்னின் புறநக்ப்பகுதிகளில், வேளாண் துறை நவீனமயமாக்கத்துடன், வேளாண்மை சுற்றுலாவை வளர்க்கும் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, இயற்கைச் சூழல் வேளாண்மையும் இதனுடன் சேர்ந்து, விவசாயிகளுக்குப் பயனளிக்கிறது.
|