• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-28 16:57:43    
நவக்கிரகங்கள் என்பது சரியா, தவறா?

cri

பல ஆண்டுகளாக நாம் அறிந்த ஒரு தகவல் நமது பூமிக்கு அருகில் 8 கிரகங்கள் அல்லது கோள்கள் உள்ளன என்பதும், அவற்றோடு பூமியையும் சேர்த்து சூரியனைச் சுற்றிவரும், சூரிய மண்டல கிரகங்கள் மொத்தம் ஒன்பது என்பதுமாகும். சூரியனைச் சுற்றிவரும் இந்த கோள்கள் அல்லது கிரகங்கள் அறிவியல் ரீதியிலும், ஜோதிவியல், வான சாஸ்திரவியல் போன்ற துறைகளின் ஊடாகவும் நமது மனித வாழ்க்கையில் தொடர்புகொண்ட அம்சங்களாக அமைந்துள்ளன. உலகமுழுவதுமே நாள், நட்சத்திரம் பார்க்கும் வழக்கமும், சோடியாக் எனப்படும் கிரகங்கள், நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட வான சாஸ்திர முறைப்படியான ஜாதகம் மற்றும் ராசி பலன்களும் இருக்கவே செய்கின்றன. வான சாஸ்திரமும், விண்வெளி ஆராய்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்ட துறைகள். ஆனால் ஒரு துறையில் அறிவியல் ரீதியிலான தேடல்களும், கண்டுபிடிப்புகளும், ரீசனிங் எனப்படும் பகுத்தறிவு ரீதியிலான விளக்கமறியும் நோக்கங்களும் இருக்க, மற்ற துறையில் கணிப்புகளும், அக்கணிப்புகளை ஒட்டிய நம்பிக்கைகளும் ஆழமாக ஊன்றியுள்ளன.

வான சாஸ்திரத்தில், விண்வெளி ஆராய்ச்சியின் அடிப்படையில் கிரேக்ககர்களின் பங்கெடுப்பு அதிகம் என்பது உலகறிந்த உண்மை. அதேபோல ஆனால் வான சாஸ்திரத்தில் சீனர்களின் தொலை நோக்கும், வான சாஸ்திரத்தின் தொடர்ச்சியாக கணிதத்துறையில் இந்தியர்களின் பூஜ்யம், பையின் மதிப்பை உலகிற்கு அளித்தமை இதெல்லாம் மறந்துவிடவோ மறுத்துவிடவோ முடியாத உண்மைகளாகும்.இது போன்ற உண்மைகள் ஒரு பக்கம் இருக்க, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் மொத்தம் நாம் அனைவரும் அறிந்தபடி ஒன்பதுதானா? அல்லது எட்டு கிரகங்களா? அல்லது புதிதாக 2003ம் ஆண்டில் கண்டறியப்பட்ட செனா என்ற விண் பொருளையும் சேர்த்து மொத்தம் 10 கிரகங்களா..?? எது உண்மை என்பதை இன்றைய நிகழ்ச்சியில் அறியத் தருகிறோம். இது என்ன புது குழப்பம் என்று கேட்கும் நேயர்களே, நிகழ்ச்சியை தொடர்ந்து கவனமாக கேளுங்கள்.

ஆகஸ்ட் 14ம் நாள் முதல் 25ம் நாள் வரை செக் குடியரசின் தலைநகர் பிராகில் சர்வதேச வின்வெளி சங்கத்தின் 26வது பொது அமர்வு நடைபெறுகிறது. உலகின் பல்வேற்ய் நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்களைச் சேர்ந்தவர்கள், வெண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள அறிவியலர்கள், ஆய்வாளர்கள் சந்திக்கும் இந்த் அவருடாந்திர அமர்வு, பல முக்கிய உரைகள், ஆய்வு முடிவிகள் ஆகியவை உள்ளடக்கிய மாநாடாக நடைபெறுகிறது. இந்த 26வது பொது அமர்வில் அல்லது 12 நாள் நீடிக்கும் மாநாட்டில் விவாதிக்கப்படும் பல முக்கிய விடயங்களில் சூரிய மண்டலத்தின் அல்லது சூரிய குடும்பத்தின் உறுப்பினர்களான கிரகங்கள் பற்றிய கலந்தாலோசொனை மற்றும் முடிவுகள் குறிப்பிடத்தக்கவை. அதிலென்ன அப்படி முக்கியத்துவம் என்கிறீர்களா.

நாம் படித்த அறிவியல் பாடம் மற்றும் தற்போது நமது பிள்ளைகள் படிக்கும் அறிவியல் பாடத்தை மாற்றி எழுதக்கூடிய வாய்ப்புகள் உள்ளது என்பதே முக்கிய ஒரு செய்தி. சரி, சற்று விளக்கமாக சொல்கிறோம். சூரிய மண்டலத்தில் எத்தனை கிரகங்கள் உள்ளன என்றால் ஒன்பது கிரகங்கள் என்று சொல்வது நமக்கு பாலபாடம். மெர்குரி, வீனஸ், எர்த் (பூமி), மார்ஸ் (செவ்வாய்), ஜூபிடர் (வியாழன்), சேட்டர்ன் (சனி),யுரேனஸ், நெப்டியூன், ப்ளூட்டோஆகிய 9 கோள்கள் அல்லது கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பது நாம் அறிந்த அறிவியல் உண்மை. இதில் என்ன சிக்கல் என்றால், சூரியமண்டலத்தில் உள்ள புளூட்டோவை தனிக்கிரகமாக ஏற்பதற்கு சில அறிவியலர்கள் பல காலமாகவே மறுப்பு கூறி வருகின்றனர். அது கிரகமாக நீடிக்குமா அல்லது கிரகம் என்ற அந்தஸ்தை இழந்து வேறு விதமான பிரிவில் இணைக்கப்படுமா என்பது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 26வது சர்வதேச விண்வெளி சங்கத்தின் பொது அமர்வு மற்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்படும்.