• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-29 20:35:28    
புலி பற்றிய பேச்சோடு பேச்சு

cri
மிருகங்களின் ராஜா சிங்கம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அது தன்னிடம் உள்ள உடல் வலிமையினால் காட்டில் தட்டிக்கேட்க ஆளின்றி ஆட்சி செய்கிறது. சிங்கம் கர்ஜித்தால் காடே அலறும். ஆனால் அத்தகைய சிங்கத்தையும் தனது தந்திரத்தால் வென்ற முயல் பற்றியும் அறிவோம். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு. அவ்வளவு தான்.

சரி, சீனாவில் காட்டு ராஜா யார் தெரியுமா? சிங்கமல்ல. சிங்கத்தைப் பற்றி இந்த மக்கள் பேசுவது கூட இல்லை. மாறாக, புலியைத் தான் மிருகங்களின் ராஜாவாக சீன மக்கள் கருதுகின்றனர். கோபத்திலும், வேகத்திலும் புலி சிங்கத்திற்கு சளைத்தது அல்ல. மேலும், சிங்கம் முயலிடம் ஏமாந்தது போல, புலி எவரிடமும் ஏமாந்ததாகக் கதை இல்லை. சீனாவிலே ஒரு வீரனை புகழ்வதற்கு Hu Lang Zhi Wei என்கிறார்கள். அதாவது புலியையும் ஓநாயையும் போன்ற வீரனாம். புலியைச் சொல்லலாம். சரி, ஆனால் ஓநாயையும் ஏன் பின்னிணைப்பாகச் சேர்க்க வேண்டும்? ஒரு வேளை உடல் பலம் மட்டும் போதாது மூளைத் தந்திரமும் தேவை என்பது காரணமாக இருக்குமோ! தந்திரத்துக்குப் பெயர் போன குள்ளநரி புலியின் வீரத்தைக் கடன் வாங்கிக் கொண்டதாம்-Hu Jia Hu Wei-அதாவது இரவல் வீரத்தை தந்திரமாகப் பயன்படுத்துகிறது நரி. அதே போலத்தான் மனிதர்களும், அடுத்தவர்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.

அதே வேளையில், உடல் வலுவை வர்ணிக்க Hu Bei Xiong Yao என்கிறார்கள். அதாவது, முதுகு புலியைப் போன்றும், இடுப்பு கரடியைப் போன்றும் வலுவாக உள்ளதாம். இடைத் தேர்தலில் கரடியிடம் புலி தோற்று விட்டதோ!

புலியின் பார்வை கொடூரமானது. அது முறைத்துப் பார்த்தாலே போதும் இரையாகும் மனிதனோ, விலங்குகளோ வெலவெலத்துப் போவார்கள். புலி அடித்தது பாதி, கிலி அடித்தது பாதி என்று சும்மாவா சொன்னார்கள். சீனாவிலே யாராவது முறைத்துப் பார்த்தால் Hu Shi Dan Dan-புலி போல முறைக்கிறான் என்கிறார்கள். புலியின் பார்வை மட்டுமல்ல, அதனுடைய சிந்தனையும் கொடூரமானது. தனக்கு எதிரியாக எவருமே இருக்கக் கூடாது என்று நினைப்பது. புலியை எதிர்த்தவர் எவரும் வென்றதாக வரலாறு இல்லை. எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் ஒரே தட்டு-அவ்வளவு தான். இதைத் தான் சீனாவிலே Lao hu pi gu molude என்கிறார்கள். அதாவது புலியின் பின்பக்கத்தைக் கூட உங்களால் தொட்டுவிட முடியாதாம். அப்படி இருக்கும் போது, புலியின் பல்லைப் பிடுங்குவது பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? ஆகவே, துணிச்சல் மிக்கவனைப் பாராட்ட வேண்டுமானால், Hu Kou Hu Ya-புலியின் பல்லையே பிடுங்கியவன் என்று சீன மக்கள் புகழ் மாலை சூட்டுகின்றனர். இப்படிப்பட்ட புலிகளின் எலும்பை எடுத்து சீனாவில் மருந்து தயாரிக்கிறார்கள். இதற்கு சீன அரசு தடைவிதித்துள்ளது.

சரி, புலிகளே இல்லாமல் போனால் என்ன ஆகும்? Shan zhong wu laohu, houzi cheng dawang-குரங்கு, ராஜாவாகி விடுமாம். உண்மை தானே! தட்டிக்கேட்க ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.