• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-30 09:12:25    
மருந்து 8

cri

இடையில் அந்தக் கிழவி புதை குழிக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று உற்றுப்பார்த்தாள். "வேர்களே இல்லியே," தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். "இந்தப் பூக்கள் இங்கே முளைக்கவில்லை. யார் கொண்டு வந்து வச்சது? குழந்தைங்க இங்க விளையாட வர்றதில்லே. சொந்தக் காரங்களும் இங்க வந்ததில்லே. எப்படி இந்தப் பூக்கள் வந்திருக்கும்?" புதிராக இருந்தது. நினைத்து நினைத்து மாய்ந்த போது, அவள் கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது. பெரிதாக குரலெடுத்து அழத்தொடங்கினாள்.

"மகனே, உன்னை அனியாயமா கொன்னுட்டாங்களே! இத மறந்துடாதே. உன்னோட துக்கம் தாளாமத்தானே இந்த அற்புதத்தை நடத்திக் காட்டியிருக்கே?"

சுற்றி முற்றிப் பார்த்தாள். இலைகள் இல்லாத ஒரு மொட்டை மரத்தில் ஒரு காகம் உட்கார்ந்திருந்தது.

"எனக்குத் தெரியும். உன்னைக் கொலை பண்ணிட்டாங்க. கணக்குத் தீர்க்க வேண்டிய நாள் வரும். கடவுள் பார்த்துக் கிடுவாரு. அமைதியா கண்ணை மூடிக்கோ மகனே. நீ இங்க இருக்கறது நிஜமானால், நான் சொல்றது உனக்கு கேட்குமானால், ஒரு அடையாளமா, இந்தக் காக்கையை உன் புதைகுழிக்கு மேலே பறக்க வையி" என்று புலம்பினாள்.

தென்றல் நின்று நீண்டநேரமாகி விட்டது. உலர்ந்த புற்கள் செப்புக்கம்பி போல விறைப்பாக நின்றன. எங்கிருந்தோ ஒரு ஓலம் காற்றில் அதிர்ந்து, மங்கி மறைந்தது. சுற்றிலும் மரண மொனம் காய்ந்த புற்களின்மீது நின்றபடியே அந்தக் காக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மொட்டை மரத்தின் கட்டைமீது காக்கையும் தலையைச் சாய்த்தபடி ஆடாமல் அசையாமல் இரும்புபோல உட்கார்ந்திருந்தது.

நேரம் நகர்ந்தது. சிறியவர்களும் பெரியவர்களுமாக நிறையப் பேர் அந்த இடுகாட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

பெரிய சுவானின் மனைவிக்கு மனதில் இருந்து ஏதோ பாரம் இறங்கியது.