• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-30 14:51:12    
சிங்கியாங்கில் விவசாயி ஒருவரின் வாழ்க்கை

cri

சிங்கியாங்கில் வாழும் உய்கூர் இன மக்கள்

சிங்கியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், சீனாவில் அதிக நிலப்பரப்பு கொண்ட பிரதேசமாகும். அதன் நிலப்பரப்பு, சீன பரப்பளவில் ஆறில் ஒரு பகுதியாகும். 30 லட்சத்துக்கு வேலான ஹேக்டர் விளை நிலம் உண்டு. பகல் இரவு தட்ப்ப வெட்ப நிலையில், பெரிதும் வித்தியாசம் உள்ளது. அங்கு சூரிய ஒளி போதுமான அளவு கிடைப்பதால், முலாம் பழம், திராட்சைப் பழம் போன்ற பலவகை பழவகைகளும் பருத்தியும் செழித்து வளர்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, சிங்கியாங்கில் பாரம்பரிய வேளாண்துறை வலுப்படுத்தப்படும் அதே வேளையில், பலதரப்பட்ட தனித்தன்மை வாய்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கும் பெரும் ஆதரவு தரப்படுகிறது. விவசாயிகளும் ஆயர்களும் இதனால் நன்மை பெற்று வளமடைந்துள்ளனர்.

Rou Zi Tu Er Xun என்பவர், Kashi பிரதேசத்தின் Pahataikeli வட்டத்தில் வசிக்கின்றார். முன்பு அவர் விவசாய துறையில் ஈடுபட்டார். என்றாவது ஒரு நாள் தனக்கு புதிய வீடு, மோட்டார் வண்டி செல்லிடப் பேசி கிடைக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன் அவர் நினைத்திருக்க மாட்டார். இருப்பினும், சில ஆண்டுகள் கழிந்த பின், இந்த வாழ்க்கை வசதிகள் நடைமுறையாகி விட்டன. மாடு வளர்ப்பு தான், தமது வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று அவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது பணம் எல்லாவற்றையும் கொண்டு, சில மாடுகளை வாங்கி, குடும்பத் தொழிலாகத் துவங்கினார். இதன் விளைவாக, சில ஆண்டுகளுக்குப் பின், மாடுகளை விற்பனை மூலம் அவர் வளமடைந்து வருகின்றார். கடந்த ஆண்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் யுவானைச் செலவழித்து, புதிய வீடு கட்டினார். அன்றி, உழவு இயந்திரத்தையும் மோட்டார் வண்டியையும் வாங்கினார். முன்பு நினைக்க முடியாத வளமான வாழ்க்கை இப்போது அவருக்கு நனவாகி விட்டது. தற்போது, வேளாண் பணி இல்லாத போது, தனது குடும்பத்தினர்களுடன் வெளியூரில் சுற்றுலா செல்வதும் உண்டு.

"இப்போது எனது வாழ்க்கை மேம்பட்டுள்ளது. முன்பு நாங்கள் நகரில் நுழைந்த போது, மற்றவர் எங்களை இழிவாகப் பார்த்தனர். இப்போது எல்லாரும் சமம். எங்கள் வாழ்க்கை தரம், நகரவாசிகளின் தரம் போன்றது" என்றார், அவர்.

இப்பொழுது, அவர் 60 மாடுகளை வளர்க்கிறார். ஆனால், மாட்டு வளர்ப்புடன் அவர் மனநிறைவு அடையவில்லை. கிராமத்தில் மேலும் அதிகமானோர் மாட்டு வளர்ப்பில் ஈடுபடுகின்றார்கள். எனவே, மாட்டு விற்பனை விலை குறையத் துவங்கியது. எனவே, வட்டியில்லாத கடனைக் கொண்டு, வாத்துப் பண்ணை ஒன்றை நடத்தி, வாத்து விற்பனை மூலம் மேலும் கூடுதலாக சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்.