• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-31 19:15:11    
சீன-இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரைப் போட்டி

cri
கட்டுரை எழுதியவர் திருவண்ணாமலை உமா பாலு

இன்று சீன-இந்திய நட்புறவு ஏற்பட்டு 56 ஆண்டுகள் ஆகின்றன. தொழில் துறையில் சீனாவும் இந்தியாவும் ஒன்றை ஒன்று போட்டியில் மிஞ்சும் நிலை உள்ளது. சீன இந்திய உறவானது இரு நாட்டின் எல்லைப் பாதுகாப்புக்கு நல்ல அரணாகத் திகழ்கின்றது. சீன இந்திய நாடுகளுக்கிடையே நட்புறவு மூலமாக ஏற்படும் பொருளாதார வளர்ச்சி அதன் வேகம் அமெரிக்காவை அச்சுறுத்துவது என்பதை அறிவோம். அண்டை நாட்டுறவு மற்றும் நட்புறவு ஒத்துழைப்பில் அதிக அக்கறை செலுத்தும் உறவு இரு நாட்டின் பலமாக அமையும்.

வரலாற்றில் இலக்கியத்தில் தொன்மையான நாகரிகத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்த கருத்தும் செயல்பாடும் அமைந்து இருப்பது இயற்கையே.

சீன இந்திய கலாச்சாரத்தில் புத்த இஸ்லாமிய மற்றும் கிருத்துவ மதங்களைக் கொண்ட சமூகத்தை உலகளவில் பரப்புவது இரு நாடுகளின் சாதனையே.

சீன வேளாண் துறை பல்வகையில் சீர்திருத்தம் செய்து வருகின்றது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் விவசாயம் என்பது உயிர் நாடி. பாலைவனத்தை பயிர் செய்யும் நிலமாக மாற்றி 11வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்கு சீனா தனி கவனம் செலுத்துகிறது. இதை அமெரிக்க செனெட் அவையே பாராட்டியது பெருமை.

சீன வேளாண் துறை கல்வி மற்றும் தொழில் துறையில் இந்திய தொழிலாளர்களை அழைத்து பயிற்சியும் ஊக்கமும் அளிக்கலாம்.

துயர் துடைப்பு பணியில் இரு நாடுகளும் வெள்ள பெருக்கு, புயல் மற்றும் பூகம்பம், சுனாமி போன்ற சீற்ற காலங்களில் பாதிக்கப்பப்ட்ட பகுதிகளில் துயர் துடைப்பு பணி உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம் மூலம் இரு நாடுகளும் பிற நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவதும் போதை பொருள் ஒழிப்பு மற்றும் பொருள் கடத்தல் தீவிரவாத ஒழிப்பு இவைகளில் சீனாவும் இந்தியாவும் இணைந்து அதனை ஒழிக்க பாடுபடுவதும் மாபெரும் சாதனை.