• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-30 14:03:46    
நேயர்களின் கருத்துக்கள்

cri
க்ளீட்டஸ்: ஜூன் முதல் நாள் ஒலிபரப்பான அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் இயற்கை பாதுகாப்பும் மனித நலனும் என்பது பற்றிக் கேட்டேன். மனித நலனுக்காக பல உயிரினங்கள் அதிக அளவில் சுரண்டப்பட்டு வருவதை பற்றி அறிந்தோம். பரிணாம வளர்ச்சி கோட்பாட்டுக்கேற்ப பல உயிரினங்களும் மனிதனின் நடவடிக்கை எதிர்த்து போராடவேண்டியுள்ளது என்று எழுதியுள்ளார் குருணிகுளத்துப்பட்டி சொ.முருகன்.

வாணி: ஜூன் 2ம் நாள் ஒலியேறிய நட்பு பாலம் நிகழ்ச்சி பற்றி சேந்தமங்கலம் ஏ. திருவேங்கடம் எழுதிய கடிதத்தில் சீனாவில் மதச் சுதந்திரம் பற்றிய கேள்விகளுக்கு பதில் தரும் வகையில் அமைந்தது நிகழ்ச்சி. பெய்சிங்கில் உள்ள பல்கலைகழகத்தில் தமிழக மாணவர்கள் திருநீரு பூசி செல்கின்றனர், இஸ்லாமிய மாணவர்கள் மசூதிக்கும், கிறித்தவர்கள் தேவாலாயங்களுக்கும் சென்று வழபட்டு வருகின்றனர் என்பதை ஆதாரபூர்வமாக கூறியது சிறப்பு. சீனாவில் கல்வி பயிலும் மாணவர்கள் 7 மாத காலத்தில் சீன மொழியை கற்பதை அறிந்து வியந்தேன் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: ஜூன் 6ம் நாள் ஒலிபரப்பான மலர்சோலை நிகழ்ச்சி குறித்து பாண்டிச்சேரி பி. சந்திரசேகரன் எழுதிய கடிதம். மலர்சோலை நிகழ்ச்சியை லூசா அம்மையார் புதிய பல தகவல்களை சேகரித்து சிறப்பாக வழங்கி வருகிறார். உலகின் விந்தையான தகவல்களை திரட்டி நிகழ்ச்சியில் வழங்கி எம்மை வியக்க வைக்கிறார், அவருக்கு நன்றிகள் பாராட்டுக்கள் என்றுள்ளார்.

வாணி: அடுத்து பாபநாசம் திருப்பாலைத்துறை அன்பர் வீ.ப.க.மூர்த்தி எழுதிய கடிதம். பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து சீனாவில் இருந்தபடி தமிழ் மண்ணின் மீது அன்பு கொண்டு, தமிழ்நாட்டு மக்களை இணைக்கவும், தமிழை வளர்க்கவும் முன் வந்துள்ள சீன வானொலிக்கு நன்றி. தமிழகத்திலிருந்து நேயர்களை சீனாவுக்கு அழைத்து ஜனாதிபதிக்கு கொடுக்கும் மரியாதை கொடுத்து கவுரவிக்கும் மாண்பு போற்றுதற்குரியது. பழங்காலந்தொட்டே சீனாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருந்தது குறித்து வரலாற்று ஏடுகள் கூறுகின்றன, அவ்வுறவை 21ம் நூற்றாண்டில் சீன வானொலி செய்து வருவது பாராட்டுக்குரியது என்றுள்ளார் 70 வயதான மூத்தவர் வீ.ப.க.மூர்த்தி . பெரியவர் மூர்த்தி அவர்களே, தங்களது உணர்வுபூர்வமான வார்த்தைகளும், வாழ்த்தும் எங்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. தொடர்ந்தும் எமது பணியை நாங்கள் செவ்வனே செய்வோம் என்பதை உறுதி கூறுகிறோம். தாங்களும் எமது நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

க்ளீட்டஸ்: அடுத்து ஜூன் 20ம் நாள் இடம்பெற்ற சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றி துரையூர் த. குறிஞ்சிக்குமரன் எழுதிய கடிதம். சைவப் பிரியர்களுக்கு பயனுள்ள குறிப்பாக அமைந்தது நிகழ்ச்சி. வெப்பத்தை குறைக்கக்கூடிய வெள்ளரி, கேரட், காலிபிளவர், தக்காளி, காளான், மக்காச் சோளம், புரோக்கோலி ஆகிய காய்கறிகளை பயன்படுத்தி, குறிப்பாக முட்டை இல்லாமல் தயார் செய்த உணவு அருமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாணி: அடுத்து பெரம்பலூர் சின்னவளையம் அஞ்சல் கு.மாரிமுத்து எழுதிய கடிதம். ஜூலை முதல் தேதி செய்திகளில் சிங்காய் திபெத் ரயில் பாதை திறப்பு பற்றி ராஜாராம் அவர்கள் வாசிக்கும்போது, இவ்விழாவில் சீன அரசுத் தலைவர் ஹூ சிந்தாவ் ரயில் பாதையை திறந்து வைத்ததாக சொன்னார். இதன் மூலம் திபெத் மக்களும், சிங்காய் பகுதியின் மக்களும் நல்ல பயன் பெற முடியும். சீன மக்கள் அனைவருக்கும் இந்த ரயில் பாதை பயன் தருவதாக அமையட்டும் என்று எழுதியுள்ளார்.