
தற்போது, சீனாவின் 15 விழுக்காடு நிலப்பரப்பில் 2300க்கும் அதிகமான பல்வகை இயற்கைப் புகலிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இன்று Cheng Du நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய சீன தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமை பணியகத்தின் துணை தலைவர் வூ ஸியோ சிங், அரசு நிலை இயற்கை புகலிடங்கள், காட்சித்தலங்கள், தேசிய வனப் பூங்கா, தேசிய புவியியல் பூங்கா முதலியவை இவற்றில் அடங்கும் என்றார். முன்னுரிமை கொடுத்துப் பாதுகாக்கப்படும் இம்மண்டலங்களில், உயிரின வாழ்க்கைச்சூழல் நன்கு பராமரிக்கப்படுகிறது. பலவகை உயிரினங்கள் உள்ளன. தாவரங்கள் அடர்ந்த நில அமைப்புக்கள் மிகுதியாகி, எதிர்காலத்தில் தேசிய உயிரின வாழ்க்கைச் சூழலைப் பேணிக்காப்பதற்கு முக்கிய திரையாகத் திகழ்கின்றன என்று அவர் சொன்னார்.
|