• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-01 08:53:01    
11வது உலக பெண்கள் மென்பந்து சாம்பியன் பட்டப்போட்டிகள்

cri

பெய்சிங்கில் கடந்த ஆகஸ்ட் திங்கள் 27ம் நாள் முதல் வரும் 5ம் நாள் வரை நடைபெறும் 11வது உலக பெண்கள் மென்பந்து சாம்பியன் பட்டப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சீனா தவிர 15 அணிகள் இந்த சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுகின்றன. இந்த போட்டியில் பங்குபெறும் அணிகளில் 4 அணிகள் 2008ம் ஆண்டு நடைபெறவுள்ள பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும். 1996ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட இந்த பெண்களுக்கான மென்பந்து விளையாட்டு 2012ம் லண்டன் ஒலிம்பிக்கில் நீக்கப்பட்டுள்ளது. ஆக 2008ம் ஆண்டில் ஒலிம்பிக்கின் போது நடைபெறும் மென்பந்து போட்டிகள் குறைந்தது 8 ஆண்டுகள் கழிந்த பிறகே மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் 11வது உலக பெண்கள் மென்பந்து சாம்பியன் பட்டப்போட்டிகளில் சீன அணி தொடர்ச்சியாக 5 அணிகளை வென்று முன்னேறிக்கொண்டுள்ளது.

ஆண்களுக்கான பேஸ் பால் விளையாட்டு போல் அமையும் விளையாட்டு பெண்களுக்கான சாஃப்ட் பால். கிரிக்கெட் விளையாட்டைப் போலவே ஒருவர் பந்தை வீச எதிரணியின் ஒருவர் பந்தை மட்டையால் விளாச, பந்து ஆடுகளத்தின் எல்லைக்குள் செல்லும்போது அதை தடுத்து திரும்ப குறிப்பிட்ட இலக்கு இடங்களில் உள்ளவர்களிடம் வீசுவதற்குள் ஓடி எடுப்பது புள்ளிகளாக சேர்க்கப்படும். அடிப்படையில் ஒன்றேபோல் தெரிந்தாலும் பல வித்தியாசங்கள் கிரிக்கெட்டுக்கும், பேஸ்பாலுக்கும் உண்டு. ஆண்கள் விளையாடும் பேஸ் பால் விளையாட்டைப் போன்றே பெண்கள் விளையாடும் சாஃப்ட் பால் அல்லது மென்பந்து விளையாட்டு அமைந்துள்ளது. பயன்படுத்தும் பந்து டென்னிஸ் பந்தைப் போல் காட்சியளிக்கும் ஆனால் அளவில் சற்று பெரிதானது. இந்த சாஃப்ட் பால் அல்லது மென்பந்து விளையாட்டு உலகின் பல நாடுகளில் ஆடப்படுகிறது.

ஒன்றிணைந்த கொரிய அணி

தெற்கும் வடக்குமாக உள்ள இரு கொரிய நாடுகள் ஒரே அணியாக போட்டிகளில் பங்கெடுப்பது என்பது கொள்கையளவில் இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு டோஹாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகள், 2008ம் ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகள் இரண்டிலும் இரு கொரியாக்களும் ஒரே அணியாக பங்கெடுக்க, போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால் இது தொடர்பாக நடைபெற்ற இரு சுற்று இருதரப்பு பேச்சுகளில் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை. தடகள வீரர்களை தேர்வு செய்வது தொடர்பான கருத்து வேற்றுமை இன்னமும் நீடிப்பதால் இருதரப்பும் ஓப்புதல் ஏதும் எட்டமுடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜேக்குவஸ் ராக்கின் தலையீடு மற்றும் முன்னெடுப்பினால் மீண்டும் இருதரப்பும் முனைப்போடு ஒன்றிணைந்த கொரிய அணியாக போட்டியிடும் நோக்கில் பேச்சுகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளன. எல்லாம் நல்லபடி நடந்தால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சார்பில் ஜேக்குவஸ் ராக், வடகொரியாவின் சார்பில் அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் முன் ஜே துக், தென்கொரிய நாட்டின் சார்பில் அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் கிம் ஜங் கில் ஆகியோர் சந்திக்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படலாம் என தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த இரு கொரிய நாட்டு ஒலிம்பிக் கமிட்டித் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஜேக்குவஸ் ராக் பேச்சுக்கள் நடத்தில் சில கருத்து வேற்றுமைகளை நீக்கவேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.