• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-07 08:59:30    
சீன-இந்திய நட்புறவு ஆண்டு போட்டி

cri
எழுதியவர் சேந்தமங்கலம் க.சுரேஷ்குமார்

சீன-இந்திய நட்புறவு என்பது இரு நாட்டிற்கும் இடையே உள்ள நல்லுறவை குறிக்கிறது. இதை பற்றி இங்கு தெளிவாக காண்போம்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் மற்றும் இந்தியாவில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் இரு நாடுகளுக்கும் மிகுந்த பயனாக உள்ளன. சீனாவிலுள்ள பெருஞ்சுவர் மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

சீனாவில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பொருள் பட்டு வெங்காயம் போன்றவை. இந்தியாவில் இருந்து வாசனைத் திரவியங்கள் இயற்கை பொருட்கள் பலவற்றை சீனாவிற்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் இரு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் அதிகரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்தியா சீனா உறவு வலுவடைகிறது.

சீன மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதல் இடத்தை வகிக்கிறது. இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது. சீனாவில் கார் உற்பத்தியில் முதல் இடத்தை வகிக்கிறது. மேலும் விளையாட்டு துறையில் சீனா முதல் இடத்தை வகிக்கிறது. மேலும் சீனாவில் விளையாட்டு பொருட்கள் அழகு சாதன பொருட்கள், பல வாசனை திரவியங்கள் போன்றவற்றின் தயாரிப்பு முதலிடம் வகிக்கின்றன. இந்தியாவில் இயற்கை எங்கும் உள்ளது. இந்தியாவில் மருந்து பொருட்கள் ஊசி மற்றும் சைக்கிள் இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிக்கின்றனர். சீனாவிற்கு சைக்கிள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. சீன மக்கள் இந்தியாவில் தயாராகும் சைக்கிளை விரும்புகின்றனர். இது நட்புறவை ஏற்படுத்தும்.

மேலும் இந்திய பிரதமர் சீனாவுக்கு சென்று வந்தார். அவர் பெருஞ்சுவரை மிகவும் பாராட்டினார். இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டது. சீன மக்களிடம் இதனால் இரு நாட்டு வர்த்தகம் கூடும் என்றார். மேலும் சீனா நட்பு நிறைந்த நாடு என்றார். சீன வானொலி தமிழ்கத்துக்கு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பல முன்னேற்றத்தை ஏற்படுத்துகின்றது. நாமக்கல் சேலம் மதுரை ஆகிய மாவட்டங்களில் சீன வானொலி பல முன்னேற்றங்களை ஏற்படுத்துகின்றது. இந்தியாவில் ஏறக்குறைய 99 விழுக்காட்டு மக்கள் சீன வானொலியை விரும்புகின்றனர். சீனக் கதை பெருஞ்சுவர் ஆகியவற்றை இந்திய மக்கள் விரும்பி கேட்கிறார்கள். உழவர்கள் வயலில் உழுது கொண்டே சீன வானொலியை கேட்பார்கள். இதனால் விவசாயிகளுக்கு நட்புறவு உணர்வு ஏற்படுகின்றது. சீனப் பிரதமர் வந்து சென்றதால் இந்தியாவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் சீன வானொலியின் செய்திகள் செய்தித் தொகுப்பு, சீன உணவு , சீன பண்பாடு, சீனக் கதை, அறிவியல் உலகம், நல வாழ்வுப் பாதுகாப்பு, சீனப் பாடல் இசை நிகழ்ச்சி, விளையாட்டுச் செய்திகள் போன்றவற்றை இந்தியாவில் விரும்பி கேட்கிறார்கள். இதனால் மிகுந்த நட்புறவு வளர்கின்றது. இதனால் எங்களால் சீனாவுக்கு அப்பால் நடப்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

சீனாவிலிருந்து அஞ்சல் மூலம் அனுப்பியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி. நன்றி.

" மூன்று எழுத்து நன்றி என தொடங்கி ஐந்து எழுத்து வணக்கம்"என்று முடிக்கிறேன். மிக்க நன்றி.