திபெத்தின் மூன்றாவது சிவில் விமான நிலையம் இன்று இயங்கத் தொடங்கியது. முதலில், போயிங் 757 பயணி விமானம், செங் து நகரிலிருந்து புறப்பட்டு, 1100 கிலோமீட்டர் தொலைவு பறந்து, இன்று காலை 7 மணி 30 நிமிடத்திற்கு லிங் ஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. திபெத்தில் ஏற்கனவே லாசா, ஷாங்துங் விமான நிலையங்கள் இயங்குகின்றன. சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டி மற்றும் சிவில் விமான சேவை தலைமையகத்தின் 78 கோடி யுவான் முதலீட்டுடன் கடந்த ஏப்ரல் 28ம் நாள் இவ்விமான நிலையம் கட்டிமுடிக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பயணிகள் இந்த விங் ஸ் விமான நிலையத்தைப் பயன்படுத்தலாம்.
|