• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-04 00:29:26    
ஷாங்காய் தடகள போட்டிகள்

cri

ஷாங்காய் கோல்டன் கிராண்ட் ப்ரீ என்று அழைக்கப்படும் ஷாங்காய் தடகள விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 23ம் தேதி முதல் நடைபெறவுள்ளன. தடகள விளையாட்டு போட்டிகள் பல உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன, ஷாங்காய் தடகள போட்டிகள் அவற்றில் ஒன்றாகும். இவ்வருட போட்டிகளில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற 8 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளதாக அறியப்படுகிறது.

நூற்று பத்து மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற வீரரும், உலக சாதனையாளருமாகிய சீனாவின் லியூ சியாங், அமெரிக்க நாட்டு அதிவேக ஓட்ட வீரர் ஷான் கிராஃபோர்ட், நீளம் தாண்டும் போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்காவின் ட்வைட் ஃபிலிப்ஸ், 400 மீட்டர் ஓட்டப்பந்தய தங்க பதக்கம் வீரர் அமெரிக்காவின் ஜெரேமி வாரினர், அமெரிக்காவின், குண்டெறியும் போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற யுக்ரைன் நாட்டு யூரி பிலோனோ, பகாமாஸ் நாட்டு டோனிக் வில்லியம்ஸ் டார்லிங், நீண்ட தூர ஓட்ட வீராங்கனை எத்தியோப்பியாவின் மெசரத் டெஃபர், பெண்கள் தடை ஓட்டப்பந்தய வீராங்கனை அமெரிக்காவின் ஜொவானா ஹேயஸ் ஆகியோரும் இந்த ஷாங்காய் தடகள போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடந்த ஆண்டு ஷாங்காய் தடகள போட்டிகளில் நூற்று பத்து மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சீனாவின் லியூ சியாங் கடந்த ஜூலைத் திங்கள் 12.88 வினாடிகளில் நூற்று பத்து மீட்டர் இலக்கைக் கடந்து உலக சாதனை படைத்தார். இம்முறை அவரோடு, முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான அமெரிக்காவின் ஆலன் ஜான்சன் மற்ரும் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற லியூ சாங்கிற்கு அடுத்தவராய் ஓடி வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்காவின் டெரன்ஸ் ட்ராமல் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

உலகக் கோப்பை கூடைப்பந்து

24 நாடுகள் பங்கேற்ற உலக கூடைபந்து போட்டியின் காலிறுதிச் சுற்று முடிந்து அரையிறுதி போட்டியில் பங்கேற ஸ்பெயின், அர்ஜென்டினா, க்ரீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் தேர்வாயின.

அரையிறுதி போட்டிக்கும் முன்பாக காலிறுதியில், ஸ்பெயின் லித்துவேனியாவை என்பதொன்பது-அறுப்பதேழு என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணி 83 - 58 என்ற புள்லிகள் கணக்கில் துருக்கியை வென்றது. எழுபத்தி மூன்று-ஐந்பதாறு புள்ளிகள் என்ற வித்தியாசத்தில் க்ரீஸ் அணி பிரான்ஸ் அணியை வெற்றி பெற, அமெரிக்க அணி என்பதைந்து-அறுப்பதைந்து என்ற கணக்கில் ஜெர்மனியை வென்று அரையிறுதி போட்டியில் நுழைந்தது.

ஜப்பானின் சைதாமா நகரில் ஜப்பானிய நேரப்படி ஞாயிறு மாலை ஏழு முப்பது மணிக்கு உலகக் கூடைப்பந்து போட்டியின் இறுதியாட்டம் நடைபெறும். வெற்றி பெரும் நாடு உலக சாம்பியன் பட்டத்தை வெல்லும்.