• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-07 19:46:00    
விவாசாயி சுற்றுலாத் தொழிலில் ஈடுபடும் சிறுபான்மை தேசிய இன மக்கள்

cri

தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் நு சியாங் ஆற்றின் கரையோரத்தில் நு இன மக்கள் வாழ்கின்றனர்.
சீனாவின் யுன்னான் மாநிலத்தின் தலைநகரான குன்மிங்கிலிருந்து புறப்பட்டுப் பேருந்து மூலம் சுமார் 11 மணி நேரம் பயணம் செய்தால், நு இன மக்கள் குழுமிவாழும் கொங்சாங் நு இன துலுங் தன்னாட்சி மாவட்டத்தைச் சென்றடையலாம்.

இதைத் தொடர்ந்து மற்றொரு பேருந்து மூலம், நு சியாங் ஆற்றின் பள்ளத்தாக்கு வழியாகச் சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் சியாசங் கிராமம் சென்றடையலாம். தொலைவிலிருந்து பார்க்கும் போது, இக்கிராமம் மலைத் தொடர்களின் நடுவில் அமைந்துள்ளது. அதன் சுற்றுப்புறத்தில் அடர்ந்த மரங்கள் வளர்கின்றன.

கிராமப்புற நெடுஞ்சாலைகளின் இரு பக்கங்களிலும் மரத்தால் கட்டப்பட்ட புதிய நு இன வீடுகள் வரிசை வரிசையாக நிற்கின்றன. வீடுகளிலிருந்து நு இனப் பாடல் ஒலி அவ்வப்போது கேட்கிறது. பயணிகளை வரவேற்கும் போது நு இனத்தின் பல பழக்க வழக்கங்கள் செய்து காட்டப்படுகின்றன என்று 23 வயது நங்கை கெய்சு கூறினாள்.

நு சியாங் ஆற்று கரையோரத்தில் உள்ள தனித்தன்மை வாய்ந்த மேம்பாட்டினைப் பயன்படுத்தி, கிராமவாசிகள் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட உதவுவது என உள்ளூர் அரசு ஆறு ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தது என்றும் சுற்றுலா தொழில் துவங்கிய பின்னர், மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது என்றும் அவள் கூறினாள்.

அவள் சொல்லிக்கொண்டே, எங்களுக்காக நு இனத்தின் மது வாழ்த்துப்பாடலை கெய்சு பாடினாள். தம் குடும்பத்தால் தயாரித்த அரிசி மதுவை எங்களுக்கு அளித்தாள். விருந்தினர்களுக்கு நு இனத்தின் தனிச்சிறப்புடைய உணவுகளையும் கறிகளையும் அளிப்பது தவிர, அடிக்கடி கிராமத்திலுள்ள பெண்களுடன் சேர்ந்து Xuan Zi Wu நடனம் என்னும் நு இனத்தின் நடனத்தை ஆடுவதாகவும் கெ சு கூறினார்.

சூழல் செயல்பாடுகள் அதிகமாக இடம்பெறுவதன் காரணமாக, இந்நடனத்தின் பெயர், இது தான் என்கின்றார். நு இனத்தின் தனித்தன்மை வாய்ந்த பண்பாடு மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. செய்தியாளரிடம் தமது திட்டத்தை கெய்சு எடுத்துக்கூறினார். அவள் மேலும் கூறுகிறாள்,

இனி, பயணிகள் மேலும் அதிகமாக வருவார்களானால், கலை குழு ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளேன். "விவசாயி சுற்றுலாத் தொழிலில்" ஈடுபட்டுள்ள சில குடும்பங்களில் அரங்கேற்றி, கிராமவாசிகள் மேலும் அதிகமான பணம் பெறச்செய்திட வேண்டும்.

மற்றது, இங்கு நு இனத் தனித்தன்மையுடைய வீடுகளைக் கட்ட வேண்டும். மூன்றாவது எண்ணம், நாங்கள் அறைகளையும் காய்கறிகளையும் வழங்கி, விருந்தினர்கள் சொந்தமாக சமையல் செய்வதன் மூலம் முழுமையான நு இன வாழ்க்கையை அவர்கள் நேரில் கண்டு உணரும் படி செய்ய வேண்டும் என்றார் அவள்.

கெய்சுவுடன் பேசிக் கொண்டிருந்த போது, அவளது வீட்டில் வசிக்கும் சில பயணிகள் திரும்பினார்கள். எனவே, அவர் சமையல் அறைக்குப் போய் உணவு தயாரித்தார். குன்மிங்கிலிருந்து வந்த பயணியான செங் வெங் அம்மையார் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது

"விவசாயி சுற்றுலாத் தொழில்" நடத்தப்படுவதினால், நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வருவோர் நு இன வாழ்க்கை முறையை நேரில் காணலாம். இப்பயணிகள், நு இனத்தின் வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் சீனா முழுவதிலும் கொண்டு போய், யுன்னானில் நு இனம் என்ற தேசிய இனம் இருக்கின்றது என்பதை பரப்புவார்கள் என்றார்.

ஜியாசங் கிராமத்தில் மொத்தம் 50 குடும்பங்கள் உள்ளன. கெய்சு மற்றும் லியூ ஹைய்யாங் குடும்பங்கள் தவிர, இன்னும் சில குடும்பங்கள் விவசாயி சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுகின்றன. நு இனத்தின் சுற்றுலா தொழில் துவங்கி, அதிக காலமாகவில்லை.

மேலும் அதிகமான நு இன கிராமவாசிகள், சுற்றுலாத் தொழிலை வளர்ப்பதன் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டு, வளமடையச் செய்யும் வகையில், இனி, உள்ளூர் அரசு, இத்துறையில் மேலும் சிறந்த நிலைமையை உண்டாக்கும் என்று உள்ளூர் தேசிய இன விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

இவ்வாண்டுக்குள் மண்சாலைகளை நிலக்கீல் பாதையாக மாற்றுவோம். தவிர, இவ்விடத்தில் பேருந்து நிறுத்தப்படும் இடம், பொருள் விற்பனை மையம், ஓய்விடம், பொழுதுபோக்கு இடம் ஆகியவற்றுடன் கூடிய சதுக்கமொன்றைக் கட்டுவோம். உள்ளூர் மக்களின் பழக்க வழக்கங்களைப் பயணிகள் நேரடியாக உணரும் பொருட்டு, குதிரைக் குழு ஒன்றை நிறுவுவோம் என்றார் அவர்.

நேயர்களாகிய உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நு இனக் குடும்பத்துக்குச் சென்று, தனிச்சிறப்பு வாய்ந்த விவசாயி சுற்றுலாத் துறையை அறிந்துகொண்டு, அவர்களுடைய விரும்தோம்பலை நேரடியாக உணரலாம். வாருங்கள்.