• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-05 08:49:57    
வாய்க் கட்டுப்பாடு

cri
சிலர் இனிக்க இனிக்கப் பேசுவார்கள். ஆனால் அந்தப் பேச்சு அவர்களுடைய இதயத்தின் அடியில் இருந்து வருவதில்லை. இப்படிப்பட்டவர்களை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் என்று வடலூர் வள்ளலார் கூறுகிறார். இன்னும் சிலரோ, கடுகடுப்பாகப் பேசுவார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டாலே பயமாக இருக்கும். சாட்டையடிகளாக வார்த்தைகள் வந்து விழும். அவர்களின் முன்னால் போய் நிற்பதற்கே பயமாக இருக்கும். ஆனால் அவர்களின் மனதில் எதுவும் இருக்காது. பேசுவார்கள் காட்டமாக. ஆனால் தீங்கு செய்ய மாட்டார்கள். அவர்களின் மனம் பஞ்சு போல மென்மையாக இருக்கும். இப்படிப்பட்டவர்களை "கத்தி போன்ற உதடுகள், தோஃபு போன்ற இதயம்" என்று சீனாவில் சொல்கிறார்கள். தோஃபு என்பது சோயா மொச்சைத்தயிர் கொண்டு செய்யப்படும் மென்மையான கட்டி. சீனர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு. Dao zi zui, Dou fu xin என்பது சீனப் பழமொழி, இதற்கு முரண்பாடாக, கபடத்தனமாகச் செயல்பட்டு, எப்போதும் மனதுக்குள் சதித்திட்டம் தீட்டியபடியே, இனிக்க இனிக்கப் பேசுகிறவர்களை Kou mi fu jian என்று சீனர்கள் வர்ணிக்கின்றனர். அதாவது உதட்டிலே தேன் உள்ளத்திலே வாள்.

சரி, நாம் சரியான நேரத்தில், சரியான வார்த்தைகளைத்தான் பேசுகிறோமா? அப்படி அல்ல என்று தான் சொல்ல வேண்டும். இந்த துரதிர்ஷ்டமான நிலைக்குப் பல காரணங்கள் உண்டு. சிலருக்கு பெரிய வாய். அதாவது ஓட்டை வாய். சமயசந்தர்ப்பம் தெரியாமல் உளறிக் கொட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களை Duo zui duo she என்று சீனாவில் வர்ணிக்கிறார்கள். அதாவது பெரிய வாய்-நீளமான நாக்கு. பேச்சைக் கட்டுப்படுத்த முடியாத இப்படிப்பட்ட மனிதர்களுக்கு பலவாய்கள், பல நாக்குகள் என்கிறார்கள். ஒரு வாய் பேசுவதையே தாங்க முடியாத போது, பலவாய்கள் பேசினால் உலகம் என்னாவது?

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களால் நல்ல விஷயங்களைப் பற்றியே பேச முடியாது. பேசுவது எல்லாமே வஞ்சகம், சூது, பொய், புளுகு. இப்படி அர்த்தமின்றிப் பேசுவதிலே இவர்களுக்கு அற்பத்தனமான ஒரு மகிழ்ச்சி. இப்படிப்பட்டவர்களை கெட்ட வாய் உள்ளவர்கள்-Gou zui li tu bu chu xiang ya என்று சீனாவில் சொல்கிறார்கள். அதாவது, இப்படிப்பட்டவர்களின் வாயை நாயின் வாயுடன் ஒப்பிடுகிறார்கள். அதாவது நாயின் வாயில் இருந்து தந்தம் வெளிவராது. நாய் குரைக்கத்தானே செய்யும்! வேறு ஏதாவது பேசுமா?