
Pahataikeli வட்டத்தில், Rou Zi Tu Er Xun போன்று, வளர்ப்புத்தொழில் மூலம் வளமடைந்த விவசாய குடும்பங்கள் அதிகமாகவுள்ளன. செய்தியாளரிடம் பேசிய இவ்வட்ட தலைவர் Ai Ke Bai Er Tu La Hong, உள்ளூர் அரசு, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்த குடும்பங்களுக்கு உதவி அளித்துள்ளதாகக் கூறினார்.
"வளர்ப்புத்தொழிலில் ஈடுபடும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 0.06 முதல் 0.2 ஹெக்டர் நிலத்தை இலவசமாக வழங்கியுள்ளோம். தவிரவும், வங்கியிடமிருந்து கடன் வாங்கும் சிக்கலையும் தீர்த்து விட்டோம். கடந்த ஆண்டு முழு வட்டத்திலும் ஒவ்வொரு பெரிய வளர்ப்புத்தொழில் குடும்பத்தின் வருமானம், 30 ஆயிரம் யுவானைத் தாண்டியது" என்றார், அவர்.
சிங்கியாங்கில், Pahataikeli வட்டத்திலுள்ள விவசாயிகள்-ஆயர்களை போல வளமடையும் நம்பிக்கையை, கால் நடை வளர்ப்புத்தொழிலின் மீது வைத்துள்ளனர். நகரத்தில் வாழ்வோர் பலரும், கிராமப்புறத்துக்கு வந்து மாடு ஆடு வளர்ப்பில் ஈடுபட துவங்கியுள்ளனர். Zheng Xiang என்பவர், நகரத்திலிருந்து வந்துள்ள ஒரு புதிய விவசாயி ஆவார். முன்பு அவர் சிங்கியாங்கின் தலைநகரான உருமுச்சியின் ஒரு பள்ளியில் பணி புரிந்தார். ஓய்வு பெற்றதும், அவரது மனைவியுடன் Chang Ji எனும் இடத்தில் கறவை பசு வளர்ப்பில் ஈடுபடத்துவங்கினார்.
"கிராமப்புறத்தில் நகரத்தில் இருந்ததை விட பணம் கட்டுவது வசதி என்று அப்போது நான் நினைத்தேன். அப்போதைய கொள்கையும் நல்லது. எடுத்துக்காட்டாக, கடன் வாங்குவது வசதி. கூட்டு நிறுவனம் இலவசமாக மாட்டுத்தொழுவத்தை எங்களுக்கு வழங்கும். பால் கறத்தல் கருவியும் அளிக்கப்படும். மேலும், பால் விற்பனைக்காக 20 ஆண்டுகால உடன்படிக்கை உருவாக்கப்படும். பொதுவாகக்கூறின், மாடு வளர்ப்பில் மிகக் கவலையானது, பால் விற்பனை பிரச்சினை தான். இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதில், வேறு பிரச்சினை நிலவாது" என்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவர் பல லட்சம் யுவானைத் திரட்டி, 20க்கும் அதிகமான கறவைப் பசுகளை வாங்கினார். பின்னர், இந்த கறவைப் பசுகளை விற்பனை செய்வதன் மூலம் வளமான வாழ்க்கை நடத்தத் துவங்கினார். இப்போது, அவரிடம் 60க்கு மேலான கறவைப் பசுகள் உள்ளன. திங்கள்தோறும் பால் விற்பனை மூலம் அவருக்கு சுமார் பத்தாயிரம் யுவான் கிடைக்கின்றது. கிராமப்புறத்தில் பால்பசு வளர்ப்பு பரவாயில்லை எனக் கருதி, இவ்வாண்டில் மேலும் பல கறவை பசுகளை வாங்கத் திட்டமிட்டுள்ளார்.
|