• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-06 08:41:32    
தமிழ் மூலம் சீனம் பாடம் 59

cri
கலை..........இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி ராஜாராம் இருவரும் உங்களுடன் தமிழிலும் சீனத்திலும் உரையாடுகிறோம். நீங்கள் தயாரா?

ராஜா.....கலை, கடந்த வகுப்பில் நாம் ஈ முதல் ஷி வரையான சீன எண்களை படித்தோம். இன்றுக்கு என்ன படிக்க போகின்றோம்.

கலை......கடந்த வகுப்பில் கற்றுக் கொண்டவற்றை புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் மீண்டும் பயிற்சி செய்வது நமது வகுப்பில் வழக்கமாகும். ஆகவே இப்போது முக்கியமாக ஒன்று முதல் பத்து வரை எண்களை பேசி பயிற்சி செய்வோம். சரியா?

ராஜா.....இதில் கஷ்டம் இல்லை. நான் முதலில் இந்த பத்து எண்களை சொல்கிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10

ஈ அர் சான் ஷீ வூ லியூ ச்சீ பா ச்சியூ ஷி

கலை.....மீண்டு ஒரு முறை சொல்லுங்கள்.

ராஜா.....

1 2 3 4 5 6 7 8 9 10

ஈ அர் சான் ஷீ வூ லியூ ச்சீ பா ச்சியூ ஷி

கலை......பரவாயில்லை. நாம் இன்றுக்கு பொருட்களை வாங்குவதில் இந்த பத்து எண்களை பயன்படுத்துவது பற்றி செய்வோம். கடந்த வகுப்பில் மரியாதை, சந்திக்கும் போது எப்படி பரஸ்பரம் வணக்கம் கூறுவது, கேள்விக்கு விடையளிப்பது போன்ற எளிதான வாக்கியங்களை கற்றுக் கொண்டோம். இந்த வகுப்பில் நாம் ஏற்கனவே கற்றுக் கொண்ட சொற்களை வாக்கியங்களில் அமைத்து கற்க வேண்டும். கற்றுக் கொள்ளும் போது புதிய சொற்களையும் அறிமுகப்படுத்த வேண்டும்.

ராஜா......இது போல அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சொற்களைக் கொண்டு கற்க கொள்ள வேண்டும். இப்படியான நிலைமையில் வெளிநாட்டவர்கள் சீனாவுக்கு வந்து எளிதான உரையாடலில் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களின் சொற்களை கற்றுக் கொள்ளலாமே.

கலை.....உங்கள் யோசனையின் படி இன்றை வகுப்பில் பொருட்களை வாங்குவதற்கு தேவையான சொற்களை கற்றுக் கொள்வோம். கற்பிக்க வேண்டிய சொற்களை முதலில் குறிப்பிடுகின்றேன்.

ராஜா......சொல்லுங்கள்.

கலை........வாழ்க்கையில் நமக்கு பழங்கள் தேவை. ஆப்பிள், ஆரிஞ்சு, வாழைப் பழம் போன்ற பழங்களை குறிக்கும் சொற்களை படிக்க வேண்டும்.

ராஜா.....ஆப்பிள் என்றால் சீன மொழியில் பிங்கோ என்று பொருள். ஆரஞ்சு என்றால் சீன மொழியில் ச்சீச்சு என்று பொருள். வாழைப் பழம் என்றால் சீன மொழியில் சியாஞ்சோ வாழைப் பழம் என்று பொருள். அப்படிதானே.

கலை......நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் உச்சரிப்பு கொஞ்சம் வித்தியாசமானது. நான் குறிப்பிடுகின்றேன். நீங்கள் கவனமாக கேளுங்கள். பிங்கோ, ச்சீச்சு, சியாஞ்சோ. சரி, நாம் கற்றுக் கொண்ட எண்களுடன் இந்த மூன்று வகை பழங்களை சேர்த்து பார்ப்போம்.

ராஜா....கலை நீங்கள் சீன மொழியில் சொல்லுங்கள் நான் தமிழில் சொல்கின்றேன்.

கலை.....சரி

ஷீ க பீங்கோ

ராஜா.....நான்கு ஆப்பிள்.

கலை.......

லியூ க பீங்கோ

ராஜா.... ஆறு ஆப்பிள்கள்.

கலை.......

ச்சி க ச்சியூச்சு

ராஜா........ஏழு ஆரஞ்சுகள்.

கலை......

ச்சியூ க ச்சியூச்சு

ராஜா........ஒன்பது ஆரஞ்சுகள்.

கலை.......

வூ க சியாஞ்சியோ

ராஜா.......ஐந்து வாழைப் பழங்கள்.

கலை.......

பா க சியாஞ்சியோ

ராஜா......எட்டு வாழைப் பழங்கள்.

கலை......இப்போது எண்களுடன் மூன்று வகை பழங்களை எண்ணினோம். இப்போது கடைக்காரர் வாடிக்கையாளர் என்ற முறையில் பழங்கள் வாங்குவது பற்றி உரையாடலாமா.

ராஜா.....சரி நான்கடைக்காரர் என்ற முறையில் நீங்கள் வாடிக்கையாளர் என்ற முறையில் உரையாடலாமா?

கலை....மிகழ்ச்சி.

ராஜா.....துவங்கலாமா?

கலை.....துவங்குங்கள்.

ராஜா..... இங்கே பழக் கடை. 你 好நி ஹாங். வணக்கம்

நி மெய் ஷி மா என்ன வாங்குகிறீர்கள்?

கலை.....你好 வணக்கம்.

வோ மெய் பிங் கோ

நான் ஆப்பிள் வாங்க வேண்டும்.

ராஜா......மெய் தோ ஸோ

எவ்வளவு வாங்க வேண்டும்.?

கலை....மெய் ஈ ஜின்.

அரை கிலோ வாங்க வேண்டும்.

ராஜா.......

ஈ ஜின் கோ மா?

அரை கிலோ போதுமா?

கலை.....ஆமாம்.

ஈ ஜின் பிங் கோ யூ ஜி க?

அரை கிலோக்கு எத்தனை ஆப்பிள் வரும்

ராஜா......ஈ ஜின் பிங் கோ யூ சான் க.

அரை கிலோவுக்கு மூன்று ஆப்பிள் இருக்கும்.

கலை.....பிங் கோ ஹன் தா ஷி மா?

ஆப்பிள் பெரியது. அல்லவா?

ராஜா......கெய் ச்செ ஷ் சான் க பிங் கோ

இதோ மூன்று ஆப்பிள்.

கலை.....தோ ஷௌ சியென்?

எவ்வளவு விலை தர வேண்டும்.

ராஜா......லியாங் யுவான் சியாங் அல்லது லியாங் குவை சியென்.

இரண்டு யுவான்.

கலை.....கெய்.

இந்தாங்க.