• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-06 08:41:32    
குங் இ ச்சி 1

cri

லுச்சென் நகரில் இருந்த மதுக்கடைகள் சீனாவின் மற்ற பகுதிகளில் இருந்தவற்றை விட வித்தியாசமானவை. அவை எல்லாமே தெருவை நோக்கிய வலது கோணத்தில் கவுன்ட்டர் திறந்திருக்கும். வாசலில் மதுவை சூடாக்குவதற்கு வென்னீர் வைக்கப்பட்டிருக்கும். பகலிலும் மாலையிலும் வேலை முடித்து விட்டு வரும் தொழிலாளர்கள் ஒரு கோப்பை மது வாங்கிக் குடிப்பார்கள். இருபதாண்டுகளுக்கு முன்பு அது நான்கு செப்புகள். இப்போதோ அதன் விலை பத்து செப்புகள். கவுன்ட்டருக்கு அப்பால் நின்றபடி சூடாக மதுவைக் குடித்து களிப்பார்கள். இன்னொரு செப்பு கொடுத்தால் உப்பு போட்ட மூங்கில் குருத்துக்கள் ஒரு பிளேட் கிடைக்கும். அல்லது சீரகம் போட்டுத் தாளித்த பட்டாணி வாங்கி கொறித்துக் கொண்டே மது குடிப்பார்கள். ஒரு டஜன் செப்பு கொடுத்தால் இறைச்சி உணவு கிடைக்கும். ஆனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குட்டைச் சட்டை போட்டவர்கள். அவர்கள் எல்லோராலும் இறைச்சி வாங்கித் தின்ன முடியாது. நீண்ட அங்கி அணிந்தவர்கள் மட்டுமே உள்ளறையில் போய் மதுவும் உணவுகளும் வாங்கி, ஓய்வாக உட்கார்ந்து குடிப்பார்கள்.

எனக்கு பன்னிரண்டு வயதான போது, நகரில் நுழைந்த உடனே இருந்த குபே மதுக் கடையில் பரிசாரகனாக வேலைக்குச் சேர்ந்தேன். நீண்ட அங்கி அணிந்த வாடிக்கையாளர்களுக்குச் சேவகம் செய்ய எனக்கு அறிவு பத்தாது என்று சொல்லி, வெளி அறையிலேயே வேலை கொடுத்து விட்டார்கள். குட்டைச் சட்டை அணிந்தவர்களை வெகு எளிதில் சந்தோஷப்படுத்தி விடலாம். ஆனால், அவர்களிடையேயும் தகராறு செய்யக் கூடிய சிலர் இருந்தனர். மஞ்சள் நிற மதுவை தங்கள் கண் முன்னாலேயே பானையில் இருந்து எடுத்து கோப்பையில் ஊற்ற வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். மதுப்பானைக்கு அடியிலே தண்ணீர் இருக்குமோ என்ற சந்தேகம். இப்படி எல்லோரும் உற்றுப் பார்க்கும் போது, மதுவில் தண்ணீர் கலப்பது கடினம். ஆகவே, சில நாட்களிலேயே நான் இந்த வேலைக்கு லாயக்கிலை என்று என் முதலாளி முடிவு செய்துவிட்டார். நல்ல வேளையாக என்னை வேலைக்கு அனுப்பியவர் செல்வாக்கான ஆள். அதனால் என்னை வேலையில் இருந்து எடுக்க முடியவில்லை. மதுவைச் சூடாக்கும் வேலைமட்டும் எனக்குத் தரப்பட்டது.