
சீனாவில், லியு யாங் நகரம், வாணவெடி நகரமென அழைக்கப் படுகின்றது. இந்நகரில் உற்பத்தி செய்யப்படும் வாணவெடிகள் பல வண்ணங்களைக் கொண்டவை. மிகவும் அழகானவை.
தவிர, இந்நகருக்கு ஊடாகச் செல்லும் லியு யாங் ஆறும் புகழ்பெற்றது. இவ்வாற்றின் பெயரே இந்நகரின் பெயராக அமைந்துள்ளது. லியு யாங் ஆறு நெடுகிலும் அழகான இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன.
கொத்து மலர்ச் செடிவகை கற்கள், லியு யாங் ஆற்றின் அடிவாரத்தில் மட்டுமே உருவெடுக்கின்றன. இதுவரை, லியுயாங் வாணவெடியின் வரலாறு 1400 ஆண்டு பழமையானது.
அதன் காட்சியகத்தில் முக்கியமாக, வாணவெடியின் துவக்கத்திலிருந்து இதுவரையான தயாரிப்புத் தொழில் நுட்பங்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக, தற்போது பல தொழிற்சாலிகளில் கையால் வாணவெடி தயாரிப்பது குறைவு. இதற்குப் பதிலாக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றில் 2 வாணவெடிகள் குறிப்பிடத் தக்கவை. ஒன்று, மிகப் பெரிய அழகான தாமரை வடிவ வாணவெடி. அது, ஆகாயத்தில் சுமார் 2 நிமிடம் தங்கிவிட்ட பின் மறையும்.
மற்றது, தாவெய் மலைக் காட்சிப் படம். எண்ணற்ற வாணவெடிகளைக் கொண்ட இப்படத்தில், மலைகளும் மரங்களும் நடமாடும் காட்சியும் நீரோட்டம் ஓடும் காட்சியும் காணப்படுகின்றன.
|