• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-06 10:27:26    
நேயர் கடிதங்கள்

cri

க்ளீட்டஸ்: திருவாரூர் அன்பர் நன்னிலம் நா.சக்திமைந்தன் எழுதிய கடிதம். தினமணிக் கதிர் கடந்த மே 7ம் நாள் பிரசுரமான "சேந்தமங்கலத்திலிருந்து சீனாவுக்கு" என்ற கட்டுரையை படித்த பின் திரு. எஸ். எம். ரவிச்சந்திரனை தொடர்புகொண்டு முகவரி பெற்று இக்கடிதம் எழுதியுள்ள திரு. நா. சக்திமைந்தன், கவிதைகள் பாடல்கள் எழுதக்கூடியவர். தமிழகத்தின் சன் தொலைக்காட்சியில் நம்ம ஊர் விஞ்ஞானி என்ற நிகழ்ச்சியில் தனது கண்டுபிடிப்புகளான வேளான் கருவிகளுக்காக நேர்முகம் காணப்பட்டவர்.நடுவனரசால் வேளான் சாதனையாளர் விருது வழங்கப்பட்டவர். திரு. எஸ். எம். ரவிச்சந்திரனின் கட்டுரை படித்தபின் சீன வானொலியைப் பற்றி அறிய ஆர்வம் ஏற்பட்டு தற்போது நிகழ்ச்சிகளையும் செவி மடுக்க முயற்சித்து வருகிறதாக எழுதியுள்ளார்.

வாணி: அன்பு சக்திமைந்தன் அவர்களே, சீன வானொலியை பற்றிய ஆவல் கொண்டு கடிதம் எழுதியமைக்கு நன்றிகள். அதிகம் படிக்கவில்லை என்றாலும், சாதனையாளராக திகழும் உங்களது பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள். எமது நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வாய்ப்பு கிடைக்கும் போது கடிதங்கள் மூலம் உங்களது கருத்துக்களை எழுதியனுப்புங்கள். இந்திய சீன நட்புறவு தொடர்ந்து வளரட்டும். நமது நட்பும் அதற்கு உறுதுணையாக அமையட்டும்.


க்ளீட்டஸ்: அடுத்து வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் மார்ச் 12ம் நாள் நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். செய்திகளில் கடந்த ஆண்டில் சீனாவில் தொழிற்சாலை விபத்துகளில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் இறந்தனர் என்ற தகவலை அறிந்தேன். இது கவலையளிக்கும் செய்தி. தொழிற்சாலைகள், சுரங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்ரன. இவற்றை குறைக்கும் வகையில் உரிய சட்டங்கள் முன்வைக்கபடும் என்று நம்புகிறேன். 28வது உலக வன வள நாளை முன்னிட்டு சீனாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பற்றிய விபரம் அளித்தமைக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து திருவானைக்காவல் ஜி. சக்ரபாணி எழுதிய ஏப்ரல் 10ம் நாள் இடம்பெற்ற மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். சீனாவின் குராம சூழ்நிலை பற்றி குறிப்பிடும்போது ஹைனான் மாநில வேளான் காப்பீடு வளர்ச்சி, தேசிய வளர்ச்சி வங்கி வழங்கும் கடன் ஆகியவை பற்றி அறிந்தோம். பெரும்பாலான கடன் வசதி வேளாந்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதன பிரச்சனை தீர்ந்தால் வேளாந்துறை வளரும் என்பதை நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து மே 21ம் நாள் இடம்பெற்ற விளையாட்டுச் செய்திகள் பற்றி நீலகிரி கீழ்குந்தா நேயர் கே.கே.போஜன் எழுதிய கடிதம். உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடர்பான செய்திகளைக் கேட்டேன். கால்பந்து போட்டி என்று வந்துவிட்டால் ரசிகர்களை ஒரு சக்தி ஆட்கொண்டுவிடுகிறது. கால்பந்துக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கக் காரணம். அது ஏழைகளின் விளையாட்டு ஆனால் கோழைகளின் விளையாட்டல்ல. சோனியாக, குள்ளமாக, பரிதாபமாக இருக்கும் சுள்ளான்கூட திடீரென் பந்தைக் கடத்திகொண்டு போய் கோல் அடித்து உலகின் கவனத்தை ஈர்த்துவிடமுடியும். தனியாகவும், அணியாகவும் சோபிக்ககூடிய ஆட்டம். சோகங்கள், ஏமாற்றங்களை, தோல்விகளை களத்தின் நடுவே போட்டு உதை உதையென உதைத்து ஊழின் உப்பக்கத்தை பார்க்கலாம். இந்த் அவிளையாட்டில் அழகாகவும், திறமையாகவும் விளையாடும் வீரர்களுக்கு எந்த நாடு, எந்த இனம் என்று பார்க்காமல் திடிரென பல ரசிகர் மன்றங்கள் தோன்றுகின்றன. மரடோனாவுக்கும், பெலேவுக்கும் மாயவரத்திலும், பீளமேட்டிலும் ரசிகர் மன்றங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதுதான் கால்பந்தின் சிறப்பு என்று எழுதியுள்ளார்.