• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-08 09:48:15    
புகழ்பெற்ற பாடகி லுயே

cri

என்னுடைய பணி அங்கீகரிக்கப்படுவது குறித்து மிக மகிழ்ச்சியடைந்தேன். ஒரு பாடகியால் வெற்றி பெற முடியும் என்றால் பலர் அவளுக்கு உதவி வழங்குவார்கள். முதலாவது, பெண்திரைப்பட இயக்குநரான லு யே

பல ஆண்டுகளாக, சீன-அமெரிக்க பண்பாடுகளின் தொடர்ப்பையும், இரு நாட்டு மக்களின் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் வகையில், பல பயனுள்ள பணி மேற்கொண்டுள்ளார். சீனா மற்றும் அமெரிக்காவின் சிறந்த திரைப்படங்கள், தொலைகாட்சி நாடகம், பண்பாட்டு படைப்புகள் பாரம்பரிய இசை நாடகங்கள் ஆகியவற்றை, இரு நாடுகளின் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அமெரிக்காவின் காடொன் நாடகமான, MIky and dusk tang , சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். சீனாவில் வெளியிடப்பட்டதும் சிறு வயது ரசிகர்களிடையே வரவேற்ற பெற்ரது. தவிரவும், சீனாவின் கோலி, சா ங் சி ஈ ஆகியோரை, அவர் அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தி, ரசிகர்களின் அங்கீகாரமும், புகழும் கிடைக்க காரணமானார்.

நான் பாலமாக மாற விரும்புகிறேன். சீனாவின் பண்பாட்டை, மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தலாம், அமெரிக்கர்கள், சீனாவுக்கு வந்து திரைப்படம் பிடிக்க முடியும் அதன் மூலம் சீனர், அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதோடு, பணமும் ஈட்டலாம்.

முன்பு அவர் சீனாவில் வாழ்ந்த போது, புகழ்பெற்ற பீக்கிங் இசை நாடக நடிகர் மே லா பாங்விடம் பீக்கிங் இசை நாடகத்தை கற்றுக் கொண்டார். பின்னர், புகழ்பெற்ற குங் இசை நாடகத்தின் பேராசிரியர் யூ சாங் பஃயி அவருக்கு வழிகாட்டினார். பீகிங் இசை நாடக நடிப்பிலும் அவருக்கு திறமைமிக்கவர். அடிக்கடி அரங்கேறியுள்ளார். சீனாவின் பீக்கிங் இசை நாடகத்தை, அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், 1980ம் ஆண்டு, பீக்கிங் இசை நாடக நூல் வெளியிட்டார். ஐந்து புகழ்பெற்ற பீக்கிங் இசை நாடகங்களை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார். மேலை நாட்டவர், தவறாக புரிந்துக் கொண்ட சீன இசை நாடகங்களிலுள்ள பகுதிகளை அவர் முழுமூச்சுடன் சரிப்படுத்த விரும்பினார். பீக்கிங் இசை நாடக சீன மொழியில் அரங்கேற்றி, ஆங்கில மொழியில் விளக்கி கூறி, மொழி மாற்றம் செய்யும் முறையில், அமெரிக்கர், பீக்கிங் இசை நாடகத்தை நன்றாக புரிந்து கொண்டு ரசிக்க துணை புரிந்தார்.

நீண்ட காலமாக, அவர், கீழை மேலை கலப்புப் பண்பாட்டுச் சூழலில் வாழ்கின்றார். ஆனால், அவர், ஒரு சீனர் என்பதை மறக்கவில்லை. சீனாவின் பண்பாடு, சீனாவின் பாரம்பரிய வழக்கங்கள், சீனாவின் பெருமையும் தன்மானமும் எப்போதும் அவருடன் வாழ்கின்றன.