• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-08 19:43:00    
விளையாட்டுச் செய்திகள்

cri
உலகக் கோப்பை கூடைப்பந்து:

ஜப்பானில் நடைபெற்ற உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை ஸ்பெயின் அணி வென்றது. அரையிறுதியில் அமெரிக்க அணியை வென்ற க்ரீஸ் அணியை, அர்ஜென்டினாவை வென்ற ஸ்பெயின் அணி 70திற்கு 40 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று தங்கபதக்கத்தையும், உலக சாம்பியன் பட்டத்தையும் தனதாக்கியது. ஸ்பெயினிடம் தோற்கும் வரை போட்டியில் சிறப்பாக விளையாடிய க்ரீஸ் அணி வெள்ளி பதக்கத்தை பெற்றது. அரையிறுதியில் தங்ககோப்பை கனவுகளை நழுவவிட்ட அமெரிக்காவும், அர்ஜென்டினாவும் மூன்றாவது இடத்திற்காக போட்டியிட்டதில் 96க்கு 81 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்கா வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றது. அரையிறுதி போட்டியில் விளையாடியபோது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணம் இறுதிபோட்டியில் பங்கேற்காத ஸ்பெயின் அணியின் நட்சத்திரம் பௌ கஸோல், போட்டியின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

11வது உலக பெண்கள் மென்பந்து சாம்பியன் பட்டப்போட்டிகள்

15 நாடுகள் பங்கேற்ற 11வது உலக பெண்கள் மென்பந்து சாம்பியன் போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் 3க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அமெரிக்கா. ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றி பெறமுடியாததால் இப்போட்டியின் ஏற்பாட்டு மற்றும் ஒருங்கிணைப்பு நாடான சீனா சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் முன்னகரமுடியாமல் போனது. இருப்பினும் இந்த சாம்பியன் பட்ட போட்டியின் 4வது இடத்தை சீனா பிடித்துள்ளது. 2008ம் ஆண்டு பெய்சிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக இந்த உலக சாம்பியன் போட்டியில் முன்னணி இடம்பெற்ற அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் கனடா ஆகிய நாடுகள் தெரிவாகியுள்ளன. 11வது உலக பெண்கள் மென்பந்து சாம்பியன் பட்டத்தை வென்ற அமெரிக்கா கடந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்:

கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் விளையாட்டின் பெரிய பரிசுத்தொகை மற்றும் பிரசித்தி பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டப் போட்டிகள் ஆகஸ்ட் 27ம் நாள் தொடக்கம் செப்டம்பர் 10ம் நாள் வரை நடைபெறுகின்றன. கடந்த 21 வருடங்களாக டென்னிஸ் விளையாட்டில் தனக்கென தனி முத்திரை பதித்த அமெரிக்க வீரர் ஆந்த்ரே அகாசி இந்த போட்டியோடு டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தபடியால் பரவலான எதிர்பார்ப்பும், ஆதரவும் அவருக்கென இருந்தது. 36 வயதிலும் ஓடி ஆடி அவர் வெற்றி மேல் வெற்றியாக பெற்றதால், இறுதி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று தனது ஓய்வை சிறப்பாக்குவாரோ என்ற எண்ணம் எழுந்த நிலையில், ஜெர்மன் நாட்டு பெஞ்சமின் பெக்கர் என்ற வீரரிடம் தோல்வியைத் தழுவினார் அகாசி. 4 செட்கள் நீடித்த பந்தயத்தின் முடிவில் கண்ணீர் மல்க விடைபெற்றார் அவர்.

21 வருடகால டென்னிஸ் வாழ்க்கையில் அவர் கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் விளையாட்டின் பெரிய பரிசுத்தொகை மற்றும் பிரசித்தி பெற்ற போட்டிகளை 7 முறை வென்றுள்ளதோடு, மாஸ்டர்ஸ் எனும் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் விளையாடும் போட்டிகளில் 17 முறை வென்றுள்ளார். மொத்தத்தில் ஒற்றையர் ஆட்டத்தில் 60 பட்டங்களை வென்றவர் அவர். அமெரிக்க ஓபன் போட்டிகளில் தொடர்ந்து 21 முறை பங்கேற்ற பெருமையும் அவருக்கு உண்டு.

இதனிடையில் டென்னிஸ் விளையாட்டின் இளம்புயல் ரஃபேல் நடாலுக்கும், உலகத்தரவரிசையில் அவருக்கு ஒரே சவாலக நிற்கும் ரோஜர் ஃபெடரருக்கும் இடையில் இந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்ற போட்டி நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துள்ளன. ரஃபேல் நடாலின் அமெரிக்க ஓபன் சாம்பியன் வெற்றிக்கு ஃபெடரர் இறுதியில் தடையாகும் நிலைக்கு முன்பேயே, ரஷ்ய நாட்டு மிக்கேல் யூஸ்னி என்பவர் நடாலை ஆட்டத்திலிருந்து வெளியேற்றியுள்ளார். 4 செட் நீடித்த பந்தயத்தில் உலகத் தரவரிசையின் 2வது இடத்தில் உள்ள ரஃபேல் நடாலை 54வது இடம் வகிக்கும் யூஸ்னி வென்றது குறிப்பிடத்தக்கது.