• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-13 21:32:08    
சிங்கியாங்கில் வேளாண் துறையின் வளர்ச்சி

cri

சிங்கியாங்கில், பாரம்பரிய வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவதும், நன்றாக சம்பாதிக்கலாம். நிலத்தைச் சாகுபடி செய்வதும் வளமடையலாம் என்று, Zheng Xiang போல இப்போது சிங்கியாங்கில் பலர் கருதுகின்றார்கள். பருத்தி, சிங்கியாங்கின் முக்கிய வேளாண் பயிர். அங்கு சூரிய ஒளி போதிய அளவில் இருப்பதால், பருத்தி தரமானது. அதன் விளைச்சலும் அதிகம். கடந்த சில ஆண்டுகளில், சிங்கியாங்கின் பருத்தி விளைச்சல், சீனாவில் முதலிடம் வகித்துள்ளது. எனவே, சிங்கியாங்கின் விவசாயிகள் வருமானம் பெறுவதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாக பருத்தி திகழ்கின்றது. தற்போது, பருத்தி பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் வருமானம், முழு பிரதேசத்து விவசாயிகளின் நபர்வாரி நிகர வருமானத்தில் 40 விழுக்காடு வகிக்கின்றது.

இது போக, சிங்கியாங்கில், தக்காளியை முதுகெலும்பாகக் கொண்ட "சிவப்பு நிற தொழில்" உள்ளது. தற்போது, சிங்கியாங் தன்னாட்சிப் பிரதேசம், உலகில் மூன்று முக்கிய தக்காளி பயிரிடும் பிரதேசங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் அதன் தக்காளி விளைச்சல், 40 லட்சம் டன்னைத் தாண்டுகின்றது. உள்ளூர் சில பெரிய தொழில் நிறுவனங்கள், தக்காளி உற்பத்தியுடன் தொடர்புடைய தொழில்கள் மீது கவனம் செலுத்துகின்றன. இப்போது, இத்தகைய சிவப்பு நிறத் தொழிலின் வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தி வருகின்றன. Tun He நிறுவனம், இத்தகைய நிறுவனமாகும். அதன் தலைமை மேலாளர் Qin Ye Long செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில், கட்டிடப்பொருள் விற்பனை செய்த தமது நிறுவனம், வளர்ச்சியின் மையத்தை, விவசாய உற்பத்திப்பொருள் பதனீட்டு தொழில் மீது நகர்த்தி, கடந்த சில ஆண்டுகால வளர்ச்சி மூலம் சீனாவின் மிகப் பெரிய தக்காளி உற்பத்தி தொழில் நிறுவனங்களில் ஒன்றாக இது மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.

"எங்கள் மிகப் பெரும்பாலான தக்காளி சாஸ் நாட்டின் தக்காளி சாஸ் உற்பத்தியில் சுமார் 50 விழுக்காடு வகிக்கின்றது. ஆண்டுக்கு உலகின் வர்த்தக அளவில் 17 விழுக்காடு எங்களுடையது. சீனாவின் தக்காளி சாஸ் ஏற்றுமதியில் 40 விழுக்காடாகும்" என்றார்.