• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-12 17:50:05    
புகைப்பிடிப்பதை கைவிடுப்பது

cri
கலை......வணக்கம் நேயர்களே. இன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் ராஜாராமும் தி. கலையரசியும் புகைப் பிடிப்பதை கைவிடுதல் பற்றி கூறுகிறார்கள்.

ராஜா....புகையிலை எரியும் போது 4000க்கும் அதிகமான நச்சுப் பொருட்களை வெளிப்படுகின்றது.

கலை.....ஆமாம் ராஜா நீங்கள் பாருங்கள். இந்த நச்சு பொருட்கள் மனிதர்களுக்கு புற்று நோய் இருதய ரத்த நாள நோய், எலும்பின் உறுதியின்மை போன்ற தீராத நோய்களை விளைவிக்கின்றன.

ராஜா.....ஆகவே ஆண்டுதோறும் உலகில் சுமார் 50 லட்சம் மக்கள் புகையிலையுடன் சம்பந்தமான நோய்களால் மரணமடைகின்றனர்.

கலை.....இந்த சூழ்நிலையை பார்க்கும் போது புகைப் பிடிப்பதை கண்டிபாகக் கைவிட வேண்டும் என்று மக்களுக்குத் தோன்ற வேண்டுமே. ராஜா ஒரு கேள்வி. நீங்கள் ஒப்போதாவது புகைபிடித்தீர்களா?

ராஜா.....ஆமாம் தினமலர் நாளிதழில் நிருபராக ஊர் ஊராக அலைந்த போது சிறிது நாட்கள் புகைபிடித்தேன். அப்புறம் நிறுத்தி விட்டேன். ஆனால் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது வாழ்க்கையில் மிகவும் கடினமானது என்கிறார்கள். பலர் கைவிட விரும்புகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் தான் வெற்றி பெறுகின்றனர்.

கலை......இந்த நிகழ்ச்சி பற்றி நாம் இன்றைய நிகழ்ச்சியில் பேசுவோமா?

ராஜா......பேசலாம். புகைபிடிப்பதை படிப்படியாகக் கட்டுப்படுத்தி கடைசியில் கைவிடுவது எப்படி? இது பற்றி சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் துணை தலைவரான புகழ் பெற்ற பொது நல வாழ்வு பாதுகாப்பு நிபுணர் யாங் குன் குவென் அம்மையார் கூறுவதைக் கேளுங்கள்.

கலை.......புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவதற்கு முதலில் மன உறுதி வேண்டும். அவருடன் வாழ்கின்றவர்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். புகை பிடிப்பதை கைவிடும் சமூக சூழ்நிலை அவருக்கு தேவை. இந்த நிலைமையில் அவர் புகைப்பிடிப்பதை கைவிடும் போது வெற்றி பெறும் விகிதாசாரம் அதிகரிக்கும். மிகவும் தீவிரமாக சங்கிலித் தொடர் போல தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் சில சமயங்களில் மருந்து உட்கொள்ள வேண்டியிருக்கம்.

ராஜா.....அம்மையார் யாங் சொன்னதைக் கேட்டு மூன்று முக்கிய வழிகளை நான் தொகுத்து சொல்லட்டுமா? மன உறுதி, வாழ்க்கைச் சூழல் மருந்தின் ஆதரவு என்பன புகைப்பிடிப்பதைக் கைவிடுவதற்கு முக்கியமான தேவைகள். அப்படித்தானே.

கலை.....ராஜா நீங்கள் கூறியது சரிதான். முதலில் மன உறுதி பற்றி கொஞ்சம் கூடுதலாக குறிப்பிடலாமா?

ராஜா.....குறிப்பிடலாமே.

கலை.....நான் சொல்வதற்கு முன் பெய்சிங் நகரவாசி லி க்குய் ச்சுன் இது பற்றி கூறிய கருத்தை கேளுங்கள்.

ராஜா..... எனக்கு இப்போது வயதாகிவிட்டது. புகை பிடிப்பதால் நன்மை ஒன்னும் இல்லை. இப்போது இருமித்துப்பும் போது வெளியே வும் சளி கருப்பாக உள்ளது.

கலை.....ராஜா நீங்கள் பாருங்கள். திரு லி சொன்னது மற்ற புகைப்பிடிப்பவர்களுக்கும் பொருந்தும்.

ராஜா....ஆகவே புகைப்பிடிப்பதால் விளையும் ஆபத்தையும் அதனுடைய நாகரிகமில்லாத் தன்மையையும் இன்னும் அறிந்து கொள்ள மேலும் கூடுதலான தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும். அல்லவா?

கலை.....ஆமாம். புகைப்பிடிப்பவர்களின் வாய்க்குள்ளே உள்ள கிருமிகளின் எண்ணிக்கையை பாருங்கள். புகைப்பிடிக்காதவர்களின் வாயில் உள்ள கிருமிகளை விட புகைப்பிடிப்பவரின் வாயில் உள்ள கிருமிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாகும்.

ராஜா.....இதற்கு அறிவியல் ஆதாரம் குறைவு. தொடர்புடைய விவுயங்களை அறிந்து கொள்வது மிக முக்கியமானது. உண்மையில் புகைப்பிடிப்பதால் மனிதரின் உடல் நலனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவது இல்லை.

கலை.....மனவுறுதி தவிர புகைப்பிடிப்பதை கைவிடும் சூழ்நிலை மிகவும் முக்கிய காரணியாகும். தற்போது உலகில் 190க்கும் அதிகமான நாடுகள் "புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில்"சேர்ந்துள்ளன. புகையிலை பற்றிய விளம்பரங்களை பொது இடங்களிலும் செய்தியேடுகளிலும் வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட விதிகள் பல்வேறு நாடுகளில் வகுக்கப்படுகின்றன. புகைப் பிடிப்பதை தடுக்கும் ஒட்டுமொத்தச் சூழல் படிப்படியாக உருவாகி வருகின்றது.

ராஜா......சமூகச் சூழல் தவிர ஆதரவளிக்கும் சிறிய குடும்பச் சூழலும் மிகவும் முக்கியமானது. குடும்பத்தினர்கள், அண்டை வீட்டார் நண்பர்கள் ஆகியோரிடம் இப்போது புகைப்பிடிப்பதை கைவிடுவது பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். அவர்களிடமிருந்து ஆதரவு பெற முயற்சிக்க வேண்டும்.

கலை......அதேவேளையில் புகைப்பிடிப்பதை கைவிட விரும்புவோருடன் இணைந்து முயற்சி செய்து ஒருவருக்கு ஒருவர் ஆதரவளித்தால் புகைப்பிடிப்பதை கைவிடுவது எளிதான முயற்சியாகிவிடும்.